Published : 02 Mar 2021 11:19 AM
Last Updated : 02 Mar 2021 11:19 AM

தமிழகம், புதுச்சேரி, கேரள சட்டப்பேரவைத் தேர்தல்; அதிமுக சார்பில் விருப்ப மனு அளித்தவர்களிடம் மார்ச் 4-ம் தேதி நேர்காணல்

தமிழகம், புதுச்சேரி, கேரள சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் வரும் 4-ம் தேதி நேர்காணல் நடைபெற உள்ளதாக, அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வரும் ஏப்.6 அன்று சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. மே 2 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ளதால், தொகுதிப் பங்கீடு, போட்டியிடும் தொகுதிகள், பிரச்சாரப் பணிகள், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகளில் திமுக, அதிமுக ஆகிய இரு பிரதான கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு மட்டும் 23 தொகுதிகள் என ஒப்பந்தம் கையெழுத்தானது. தேமுதிக, பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்பது இறுதி செய்யப்படவில்லை.

இந்நிலையில், தமிழக, புதுச்சேரி, கேரள சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் வரும் 4-ம் தேதி நேர்காணல் நடைபெற உள்ளதாக, அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, அதிமுக தலைமைக் கழகம் இன்று (மார்ச் 02) வெளியிட்டுள்ள அறிவிப்பு:

"தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத் தேர்தல்; புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தல்களில் போட்டியிட விரும்பி தலைமைக் கழகத்தில் விருப்ப மனு செலுத்திய அனைவருக்குமான நேர்காணல், தலைமைக் கழகத்தில் வருகின்ற 4-ம் தேதி, வியாழக்கிழமை கீழ்க்கண்டவாறு மாவட்ட வாரியாக நடைபெற உள்ளன.

காலை 9 மணி முதல்:

- கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு, தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு, திருநெல்வேலி மாவட்டங்கள்.

- தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் கிழக்கு, விருதுநகர் மேற்கு மாவட்டங்கள்.

- திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு, தேனி, மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு மாவட்டங்கள்.

- திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் வடக்கு, தஞ்சாவூர் தெற்கு மாவட்டங்கள்.

- புதுக்கோட்டை வடக்கு, புதுக்கோட்டை தெற்கு, நாமக்கல், ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர், நீலகிரி மாவட்டங்கள்.

- கோவை மாநகர், கோவை புறநகர் வடக்கு, கோவை புறநகர் தெற்கு, திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர் கிழக்கு, திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டங்கள்.

- சேலம் மாநகர், சேலம் புறநகர், தருமபுரி, கிருஷ்ணகிரி கிழக்கு, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டங்கள்.

பிற்பகல் 3 மணி முதல்:

- கரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி மாநகர், திருச்சி புறநகர் வடக்கு, திருச்சி புறநகர் தெற்கு மாவட்டங்கள்.

- வேலூர் மாநகர், வேலூர் புறநகர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள்.

- விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் கிழக்கு, கடலூர் மத்தியம், கடலூர் மேற்கு மாவட்டங்கள்.

- காஞ்சிபுரம், செங்கல்பட்டு கிழக்கு, செங்கல்பட்டு மேற்கு, திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு மாவட்டங்கள்.

- திருவள்ளூர் வடக்கு, திருவள்ளூர் மத்தியம், திருவள்ளூர் தெற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு மாவட்டங்கள்.

- வடசென்னை வடக்கு (கிழக்கு), வடசென்னை வடக்கு (மேற்கு), வடசென்னை தெற்கு (கிழக்கு), வடசென்னை தெற்கு (மேற்கு) மாவட்டங்கள்.

- தென்சென்னை வடக்கு (கிழக்கு), தென்சென்னை வடக்கு (மேற்கு), தென்சென்னை தெற்கு (கிழக்கு), தென்சென்னை தெற்கு (மேற்கு), சென்னை புறநகர் மாவட்டங்கள்.

- புதுச்சேரி மாநிலம், கேரள மாநிலம்

இந்நேர்காணலில், தொகுதி பற்றிய நிலவரம், வெற்றி வாய்ப்பு பற்றிய நிலவரம் அறிந்திட, தங்களுக்காக விண்ணப்பித்துள்ளவர்கள் மட்டும் விருப்ப மனு பெற்றதற்கான அசல் ரசீதுடன் தவறாமல் தலைமைக் கழகத்திற்கு வருகை தந்து, நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் - தமிழ்நாடு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் - தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x