ஊத்துக்குளியில் திருடப்பட்ட ஏடிஎம் இயந்திரம் பெருந்துறை அருகே மீட்பு

பெருந்துறையை அடுத்த சரளை என்ற இடத்தில் கிடந்த உடைக்கப்பட்ட ஏடிஎம் இயந்திரத்தை போலீஸார் மீட்டு விசாரணை நடத்தினர்.
பெருந்துறையை அடுத்த சரளை என்ற இடத்தில் கிடந்த உடைக்கப்பட்ட ஏடிஎம் இயந்திரத்தை போலீஸார் மீட்டு விசாரணை நடத்தினர்.
Updated on
1 min read

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் திருடப்பட்ட வங்கி ஏடிஎம் இயந்திரம், பெருந்துறை அருகே உடைந்த நிலையில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே கூலிபாளையம் பகுதியில் பேங்க் ஆஃப் பரோடா வங்கி மற்றும் ஏடிஎம் மையம் உள்ளது. இந்த மையத்தில் நேற்று முன்தினம் நுழைந்த ஒரு கும்பல், ஏடிஎம் இயந்திரத்தை திருடி காரில் கடத்திச்சென்றது. தகவலறிந்த போலீஸார்தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் ஏடிஎம் இயந்திரத்தை எடுத்துச் சென்ற கார் மட்டும்பெருந்துறை விஜயமங்கலம்அருகே கண்டறியப்பட்டது. ஈங்கூரைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரது காரைத் திருடிய கும்பல்,அதனைக் கொண்டு ஏடிஎம் இயந்திரத்தைக் கடத்தி கொள்ளையடித்துள்ளது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில் பெருந்துறை அருகே சரளை என்ற இடத்தில், உடைக்கப்பட்ட ஏடிஎம் இயந்திரத்தை போலீஸார் கண்டு பிடித்தனர். தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 300 மீட்டர் தொலைவில், காலி நிலத்தில் உடைக்கப்பட்டு, சிதறி கிடந்த ஏடிஎம் இயந்திர பாகங்களை மீட்டு, போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக போலீஸார் கூறும்போது, ஊத்துக்குளியில் ஏடிஎம் இயந்திரத்தை பெயர்த்து எடுத்து திருட்டு வாகனத்தின் மூலம் கொண்டு வந்த கொள்ளையர்கள், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இயந்திரத்தை உடைத்துள்ளனர். அதில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு, வேறு வாகனத்தில் தப்பிஉள்ளனர். இப்பகுதியில் உள்ளசுங்கச்சாவடிகளில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் உதவியுடன் கொள்ளையர்கள் தப்பிச்சென்ற வாகனம் குறித்து விசாரணை நடந்து வருகிறது, என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in