கோழிப்பண்ணையால் சுகாதார சீர்கேடு அபாயம்

திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள குறைதீர் பெட்டியில் மனுக்கள் போட்ட பொதுமக்கள். (அடுத்தபடம்) ஊத்துக்குளி அருகே கோழிப்பண்ணை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்த புஞ்சைதளவாய்பாளையம் கிராம மக்கள்.படங்கள்: இரா.கார்த்திகேயன்
திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள குறைதீர் பெட்டியில் மனுக்கள் போட்ட பொதுமக்கள். (அடுத்தபடம்) ஊத்துக்குளி அருகே கோழிப்பண்ணை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்த புஞ்சைதளவாய்பாளையம் கிராம மக்கள்.படங்கள்: இரா.கார்த்திகேயன்
Updated on
1 min read

ஊத்துக்குளி அருகே கோழிப்பண் ணையால் சுகாதார சீர்கேடு ஏற்படும்அபாயம் உள்ளதாக, பல்வேறு கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்.6-ம் தேதி நடைபெறுவதால், வழக்கமான அரசு நிகழ்ச்சிகள் ரத்தாகின. திங்கள்கிழமைதோறும் நடைபெறும் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டமும் நேற்று நடைபெறவில்லை. பல்வேறு பிரச்சினைக ளுக்காக வந்தவர்கள், திருப்பூர் ஆட்சியர் அலுவலக நுழைவுவாயில் பகுதியில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் மனுக்களை போடுமாறு ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் மற்றும் போலீஸார் கேட்டுக் கொண்டனர். அதன்படி, பொதுமக் கள் பலரும் மனுக்களை அதில் போட்டனர். தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே குறைதீர் கூட்டம் நடத்தப்படும் என்பதால், பொதுமக்கள் தங்களது குறைகளை வாராந்தோறும் குறைதீர் பெட்டியில் போட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஊத்துக்குளி வட்டம் தொட்டியபாளையம் புஞ்சைதள வாய்பாளையம் கிராம மக்கள் மனு அளித்து கூறும்போது, "எங்கள் பகுதியில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வசிக்கின்றனர். வீடுகள் மற்றும் தோட்டங்களில் கால்நடைகளை வளர்க்கிறோம். இந்நிலையில், எங்கள் பகுதியில் புதிதாக கோழிப்பண்ணை அமையஉள்ளது. அதற்கான கட்டுமானப் பணி நடந்து வருகிறது. எங்கள் கிராமத்தை சுற்றி வடக்கு மல்லாங் காட்டுப்புதூர், கொங்கம்பாளையம், சின்னையாகவுண்டம்பாளையம், தளவாய்பாளையம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு கோழிப் பண்ணை அமைந்தால், சுற்றியுள்ள கிராமங்களில் சுகாதார சீர்கேட்டுக்கு வழிவகுக்கும். கால்நடைகளை சுத்தமாக வளர்க்க முடியாத சூழல் ஏற்படும். பொதுமக்களும் மிகுந்த அவதிக்கு ஆளாவார்கள்.

கோழிப் பண்ணையில் இருந்து வெளியேறும் கழிவுகள் மற்றும் துர்நாற்றத்தால் சுற்றுவட்டார மக்களும், கால்நடைகளும் சுவாசக் கோளாறுகளை சந்திக்க நேரிடும். ஈக்கள் தொந்தரவு அதிகமாக இருக்கும்.

எனவே, கோழிப்பண்ணை அமைக்க அனுமதி அளிக்கக்கூடாது" என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in