

கடலூரில் காரில் எடுத்து வந்தரூ. 68 ஆயிரம் பறிமுதல் செய்யப் பட்டது.
கடலூரில் நிலையான கண்காணிப்பு குழுவினர் கோட்ட கலால் தனி வட்டாட்சியர் கலாவதி தலைமையில் நேற்று பெரியக்காட்டுப்பாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி சென்றகாரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் வந்த சென்னையைச்சேர்ந்த ஒப்பந்ததாரர் பிரகாஷிடம் கணக்கில் வராத பணம் ரூ. 68 ஆயிரத்து 600 பறிமுதல் செய்யப்பட்டது. இது போல கடலூர் முதுநகர் மெயின் ரோட்டுபகுதியில் நிலையான கண்காணிப்பு குழுவினர் நில எடுப்புவட்டாட்சியர் விஜயா தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த அமமுக பிரமுகர்பக்தரட்சகன் காரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் சசிகலா, ஜெயலலிதா, டிடிவி தினகரன் படம் போட்ட 63 பனியன்கள் இருந்தன. இதையடுத்து பனியன் களை பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட பணம், பனியன்கள் ஆகியவை கடலூர் வட்டாட்சியர் பலராமனிடம் ஒப்படைக்கப்பட்டது.