

மதுரை அரசு ராஜாஜி மருத்து வமனை உட்பட 61 மையங்களில் சட்டப்பேரவைத் தேர்தலில் பணியாற்றும் பணியாளர்கள், நோயாளிகள், முதியவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
தமிழகத்தில் மருத்துவர், செவிலியர், தூய்மைப் பணி யாளர் போன்ற முன்களப் பணியாளர்களுக்கு முதற்கட்டமாக கடந்த மாதம் 16-ம் தேதி கரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில், நேற்று முன்தினம் வரை 23,285 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
நேற்று 2-ம் கட்டமாக, மதுரை மாவட்டத்தில் அரசு ராஜாஜி மருத்து வமனை, அனைத்து அரசு வட்டார சுகாதார நிலையங்கள் உட்பட 61 மையங்களில் 60 வயதுக்கு மேற்பட்டோர், முதியவர்கள் மற்றும் 45 வயது முதல் 59 வயது க்குட்பட்ட நோயாளிகளுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி சுகாதாரத்துறை சார்பில் தொடங் கியது. இதில், தேர்தலில் பணியாற்ற உள்ள அனைத்துப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. முன்பதிவு செய் தவர்களுக்கு மட்டுமல்லாது நேரடியாக மையங்களுக்குச் சென்றவர்களுக்கும் தடுப்பூசி போட்டனர். ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஏதாவது ஒரு அடையாள அட்டை நகலைப் பெற்றுக்கொண்டு தடுப் பூசி போட்டனர்.
முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடுத்திட்டம் செயல்படுத்தப்படும் தனியார் மருத்துவமனைகளில் ரூ.250 செலுத்தி தடுப்பூசி போட்டனர்.