மதுபான கடத்தலைத் தடுக்க புதுச்சேரியில் 10 இடங்களில் சோதனைச்சாவடிகள்: ரூ.3.69 லட்சம் மதுபானம், சாராயம் பறிமுதல்

மதுபான கடத்தலைத் தடுக்க புதுச்சேரியில் 10 இடங்களில் சோதனைச்சாவடிகள்: ரூ.3.69 லட்சம் மதுபானம், சாராயம் பறிமுதல்
Updated on
1 min read

மதுபானக் கடத்தலைத் தடுக்க கலால்துறை சார்பில் புதுச்சேரியில் 10 இடங்களில் சோதனைச்சாவடிகள் ஆமைக்கப்பட்டுள்ளன. ரூ. 3.69 லட்சம் மதுபானம், சாராயம் பறிமுதல் செய்யப்பட்டதாக கலால்துறை துணை ஆணையர் சுதாகர் தெரிவித்தார்.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ல் நடக்கிறது. அதனால் புதுச்சேரியில் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளன.

தேர்தல் துறை அதிகாரிகள் உத்தரவுப்படி மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. போலீஸார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, பணம், பரிசுப் பொருட்கள், மதுபானக் கடத்தலைத் தடுப்பதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரி கலால்துறை துணை இணையர் சுதாகர் உத்தரவின் பேரில் புதுச்சேரி ஏல்லையில் கனகசெட்டிகுளம் (மரக்காணம் சாலை), மடுகரை (சிறுவந்தாடு } தன்ராம்பாளையம் சாலை), முள்ளோடை (கடலூர் சாலை), மதகடிப்பட்டு (விழுப்புரம் சாலை), கோரிமேடு (திண்டிவனம் சாலை), திருக்கனூர் (வழுதாவூர் சாலை), சேதராப்பட்டு (மயிலம் சாலை), சோரியாங்குப்பம், தவளக்குப்பம், அய்யங்குட்டிப்பாளையம் ஆகிய 10 ஈடங்களில் கலால் சோதனைச்சாவடிகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.

சோதனைகள் வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும். பொதுமக்கள் மற்றும் கட்சியினர் வாகனங்களில் உரிய ஆவணங்களின்றி ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் பணம் ஏடுத்துச் சென்றாலும், விளம்பர சுவரொட்டிகள், விளம்பர பொருள்கள், ரூ.10 ஆயிரத்துக்கு மேல் மதிப்புடைய மருந்துகள், மதுபானங்கள், பரிசு பொருட்கள் ஏடுத்துச் சென்றாலும், ஆயுதங்கள், சட்டவிரோத பொருட்கள் ஏடுத்துச் சென்றாலும் அவற்றை பறிமுதல் செய்யலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கலால்துறை துணை ஆணையர் சுதாகர் கூறுகையில், "சட்ட விதிமுறைகளை மீறி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ரூ. 3.69 லட்சம் மதுபானங்கள் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டன" என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in