Last Updated : 01 Mar, 2021 06:07 PM

 

Published : 01 Mar 2021 06:07 PM
Last Updated : 01 Mar 2021 06:07 PM

மாணவர்களுடன் ஜூடோ: கன்னியாகுமரியில் ராகுல் காந்தி உற்சாகம்

நாகர்கோவில்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தமிழகத்தில் 2-வது கட்டத் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார். தூத்துக்குடியில் நேற்று முன்தினம் பிரச்சாரத்தைத் தொடங்கியவர் நெல்லை, தென்காசியில் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு இன்று கன்னியாகுமரி வந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடு புனித ஜோசப் மெட்ரிக் பள்ளியில் மாணவ, மாணவியர்களுடன் நடந்த கலந்துரையாடலின்போது ஜூடோ, நடனம், தண்டால் என உற்சாகமாகப் பங்கேற்றார்.

மாணவிகள் சிலரை மேடைக்கு அழைத்து அவர்களுடன் கைகோத்த ராகுல் காந்தி, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, காங்கிரஸ் கமிட்டி தமிழகப் பொறுப்பாளர் தினேஷ்குண்டுராவ் ஆகியோரையும் அழைத்து அனைவருடனும் சேர்ந்து உற்சாகமாக நடனமாடினார். அப்போது மாணவர்கள், ஆசிரியர்கள் பலத்த கரகோஷம் எழுப்பினர்.

பின்னர் உடலை எப்படிப் பேணுகிறீர்கள் என மாணவியர் கேட்ட கேள்விக்கு, ஓட்டப்பயிற்சி, நீச்சல், சைக்கிள் ஓட்டுவது மூலம் உடல் நலனைக் காத்து வருவதாகவும், ஜூடோவில் மாநில அளவில் விருது பெற்றிருப்பதாகவும், அரிசி, சப்பாத்தி போன்றவற்றைத் தவிர்த்து புரதச் சத்து நிறைந்த உணவைச் சாப்பிடுவதாகவும் தெரிவித்தார்.

அப்போது தன்னுடன் தண்டால் எடுக்க யாராவது தயாரா? என ராகுல் கேட்டதும், மாணவி ஒருவர் மேடைக்கு வந்தார். அவருடன் போட்டி போட்டு ராகுல் காந்தி தண்டால் எடுத்தார். பின்னர் மாணவி அதிக நேரம் தண்டால் எடுத்தபோது, அதைத் தொடரமுடியாமல் ராகுல் உட்கார்ந்தார்.

பின்னர் ஒரு கையாலும் தன்னால் தண்டால் எடுக்கத் தெரியும் எனக் கூறியவாறு அவர் தண்டால் எடுத்தார். அத்துடன் அங்கு நின்ற மாணவர் ஒருவரை அழைத்து அவருடன் ஜூடோ ஸ்டெப்களை போட்டுக் காட்டினார்.

மாணவர்களுடன் கலந்துரையாடலின்போது இதுபோன்று ராகுல் காந்தி மேற்கொண்ட செய்கைகள் மாணவ, மாணவியர்களையும், பார்வையாளர்களையும் வெகுவாகக் கவர்ந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x