மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் பிறந்த நாள் வாழ்த்து

ராகுல் காந்தி - ஸ்டாலின்: கோப்புப்படம்
ராகுல் காந்தி - ஸ்டாலின்: கோப்புப்படம்
Updated on
1 min read

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் இன்று (மார்ச் 1) தனது 68-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி இன்று காலை மறைந்த திமுக தலைவர் கருணாநிதி வசித்த கோபாலபுரம் இல்லத்துக்கு வந்த ஸ்டாலின், தாயாரிடம் ஆசி பெற்றார். பின்னர், தந்தையின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய அவர், பின்னர் அண்ணா நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்தினார்.

அதே வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதியின் நினைவிடத்திலும் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதன்பின், அங்கிருந்து கிளம்பி வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்திற்கும் சென்று மரியாதை செலுத்தினார்.

ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று தன் ட்விட்டர் பக்கத்தில், "திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள். உங்களுக்கு நல்ல ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் கிட்டட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப் பயணத்தில் இருக்கும் ராகுல் காந்தி, ஸ்டாலினுக்குத் தொலைபேசியில் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார். இத்தகவலை, காங்கிரஸ் ஊடகத்துறை தலைவர் ஆ.கோபண்ணா வெளியிட்டுள்ளார்.

கே.எஸ்.அழகிரி: கோப்புப்படம்
கே.எஸ்.அழகிரி: கோப்புப்படம்

இதேபோன்று, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "தமிழகத்தில் மதச்சார்பற்ற ஜனநாயகக் கூட்டணியின் தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு தமிழக காங்கிரஸ் சார்பாக இனிய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in