சிலிண்டர் விலை மேலும் ரூ.25 அதிகரிப்பு: சென்னையில் ரூ.835-க்கு விற்பனை

சிலிண்டர் விலை மேலும் ரூ.25 அதிகரிப்பு: சென்னையில் ரூ.835-க்கு விற்பனை
Updated on
1 min read

சென்னையில் சமையல் காஸ் சிலிண்டர் விலை மேலும் 25 ரூபாய் அதிகரிக்கப்பட்டு ரூ.835-க்கு விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரியில் சமையல் கேஸ் சிலிண்டர் 100 ரூபாய் விலை உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் ரூ.25 உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று முதல் ஒரு சிலிண்டர் ரூ.835-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் நிலவரத்தின்படி சமையல் காஸ் சிலிண்டர் விலை மாற்றியமைக்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால், எண்ணெய் நிறுவனங்கள் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. இதனால், மத்தியப் பிரேதசம், ராஜஸ்தான் மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-க்கு மேல் அதிகரித்தது.

இதற்கிடையில், சமையல் காஸ் சிலிண்டர் விலையும் தற்போது அதிகரித்து வருகிறது. வீடுகளில் பயன்படுத்தும் 14.2 கிலோ எடையுள்ள மானிய சிலிண்டர் விலை கடைசியாக கடந்த பிப்ரவரி 25ம் தேதியன்று ரூ.25 உயர்த்தப்பட்டு ரூ.810-க்கு விற்கப்பட்டது.

இந்நிலையில் இன்று (மார்ச் 1ம் தேதி) சென்னையில் சிலிண்டர் விலை மேலும் ரூ.25 அதிகரிக்கப்பட்டு ரூ.835க்கு விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி மாதத்தில் 3 முறை உயர்வு தந்த அதிர்ச்சியிலிருந்து விலகாத பொதுமக்கள் சமையல் காஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் மேலும் கலக்கமடைந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in