

காணொலி மூலம் நடந்த இந்திய வம்சாவளி மருத்துவர்கள் மாநாட்டில், முதியோர் நல மருத்துவர் வ.செ.நடராசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
உலகளவில் உள்ள இந்திய வம்சாவளி மருத்துவர்கள் மாநாடு, காணொலி மூலம் கடந்த 27, 28-ம் தேதிகளில் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கத்தில் இந்தியா மற்றும் சுமார் 50 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு மருத்துவர்கள் பங்கேற்றனர். 35-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. இதில் 6 மருத்துவர்களுக்கு சிறந்த சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டன.
அறக்கட்டளைக்கு அன்பளிப்பு
முதியோர் நல மருத்துவர் வ.செ.நடராசனுக்கு, முதியோர் நலத் துறையில் கடந்த 40 ஆண்டுகளாக சேவை செய்ததற்காக ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது வழங்கப்பட்டது.
அத்துடன் வாழ்த்து மடல், நினைவுப் பரிசு மற்றும் ரூ.1 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டது. இந்தத் தொகையை அவர் தனது டாக்டர் வ.செ.நடராசன் முதியோர் நல அறக்கட்டளைக்கு’ அன்பளிப்பாக கொடுத்துள்ளார்.
வ.செ.நடராசனுடன், பிரவின் அகர்வால், ரோகிணி ஹண்டா, நவீன் டாங், மலிகையல் ராமகிருஷ்ண கிரிநாத், மதன் மோகன் ரெட்டி ஆகியோருக்கும் சிறப்பு விருதும், ரூ.1 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டன. டாக்டர் அனுபமா சிபால் மற்றும் டாக்டர் டான்டன் ஆகியோர் இந்த கருத்தரங்குக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.