மழை சேதங்களுக்கு உடனடி நிவாரணம்: அமைச்சர் உதயகுமார் தகவல்

மழை சேதங்களுக்கு உடனடி நிவாரணம்: அமைச்சர் உதயகுமார் தகவல்
Updated on
1 min read

தொடர் மழையால் ஏற்படும் சேதங்களுக்கான நிவாரணத் தொகை உடனடியாக வழங்கப்பட்டு வருவதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பரவ லாக பெய்து வருகிறது. மழைக்காலத்தில் வருவாய்த் துறை சார்பில் மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சென்னையில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் செயல்படும் 24 மணி நேர அவசர கட்டுப்பாட்டு மையத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தென் மாவட்டங்களில் தொடர்மழையால் ஏற்பட்டுள்ள சேதங்களை ஆய்வு செய்த பிறகு அமைச்சர் கூறியதாவது:

தமிழகத்தில் தொடர்மழை பெய்துவரும் பகுதிகளில் அமைச் சர்கள் மற்றும் அலுவலர்கள் விரைந்து சென்று நிவாரணப் பணிகளை பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவிகளையும் வழங்கி வருகின்றனர்.

நிவாரணம் உயர்வு

பேரிடர்களின்போது உயிரிழந் தோர் குடும்பங்களுக்கான நிவாரணத் தொகையை ரூ.2.50 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாக முதல்வர் ஜெயலலிதா உயர்த்தியுள்ளார். மேலும், கால்நடைகள் இழப்பு ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரமாக வும், ஆடுகளுக்கு ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரமாகவும், பகுதியாக சேதமடையும் குடிசைகளுக்கு ரூ.2,500-ல் இருந்து, ரூ.4,100 ஆகவும் இழப்பீடு உயர்த்தப்பட் டுள்ளது.

இதுதவிர, முழுமையாக சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. நிவாரண உதவிகள் மாவட்ட ஆட்சியர்கள் மூலம் உடனடியாக வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in