மக்களுக்கு காவல் அரணாக திகழும் அதிமுக அரசு: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேச்சு

டி.குன்னத்தூரில் உள்ள ஜெயலலிதா கோயில் வளாகத்தில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.
டி.குன்னத்தூரில் உள்ள ஜெயலலிதா கோயில் வளாகத்தில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.
Updated on
1 min read

அனைத்து தரப்பு மக்களுக்கும் காவல் அரணாக அதிமுக அரசு உள்ளது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோ சனைக் கூட்டம் டி.குன்னத்தூரில் உள்ள ஜெயலலிதா கோயில் வளாகத்தில் நடைபெற்றது. இதில் தேர்தல் பணிகள் குறித்து கட்சியினருக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆலோசனை வழங் கினார். இக்கூட்டத்தில் அவைத் தலைவர் ஐயப்பன், மாவட்டப் பொருளாளர் திருப்பதி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களிடம் மனுக்களை வாங் கிப் பெட்டியில் வைத்துப் பூட்டி அறிவாலயத்துக்குக் கொண்டு செல்கிறார். ஸ்டாலின் ஒரு போதும் முதல்வர் பதவிக்கு வரப் போவதுமில்லை. மனுக்கள் அடங்கிய பெட்டியைத் திறக்கப் போவதுமில்லை. மக்களின் குறைகளைத் தீர்ப்பதில் முதல்வர் பழனிசாமி முதன்மையானவராகத் திகழ்கிறார். மக்களை தேடிச் சென்று, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் அரசாக அதி முக அரசு உள்ளது.

மாணவர்கள், இளைஞர்கள், தாய்மார்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் காவல் அரணாக அதிமுக அரசு உள்ளது. எனவே அதிமுக ஆட் சிக்கு வரவேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.தேர்த லில் நாம் மகத்தான வெற்றி பெறுவோம்.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in