இன்று இந்திரதனுஷ் தடுப்பூசி முகாம் தொடக்கம்

இன்று இந்திரதனுஷ் தடுப்பூசி முகாம் தொடக்கம்
Updated on
1 min read

சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி சார்பில் 2-வது தடுப்பூசி முகாம் இன்று முதல் நவம்பர் 16-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த முகாம் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் காலை 9 முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.

இந்த முகாம்களில் தடுப்பூசி போடாமல் விடுபட்ட 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும் தடுப்பூசி போடப்படும். இடம்பெயர்ந்து வாழும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும், முகாம் நாட்களில் அவரவர் வசிக்கும் இடத்திலேயே தடுப்பூசி போடப்படும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in