Published : 28 Feb 2021 08:24 AM
Last Updated : 28 Feb 2021 08:24 AM

பாமகவுக்கு இணையாக சீட் கோருகிறதா தேமுதிக?- விஜயகாந்துடன் அதிமுக அமைச்சர்கள் சந்திப்பு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக பாமகவுக்கு இணையாக 23 தொகுதிகளைக் கேட்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. மே 2 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன.

இந்நிலையில், அதிமுக கூட்டணி, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளது. பாமகவும் நேற்று 23 இடங்களை வழங்கியது அதிமுக. எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பது பின்னர் முடிவு செய்யப்படும் எனத் தெரிவித்த நிலையில் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தாதது பேசுபொருள் ஆனது.

இந்நிலையில், நேற்றிரவு அதிமுக அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி மற்றும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ஆகியோர் தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்துக்கே நேரடியாகச் சென்று சந்தித்தனர்.

தேமுதிக பொருளாளரும், விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா வெளியூர் சென்றிருந்ததால் இன்று தொகுதிப் பங்கீடு குறித்து தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடைபெறும் எனத் தெரிகிறது.

இதற்கிடையில், பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது போலவே தேமுதிகவும் 23 தொகுதிகளைக் கேட்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக நேற்று, கள்ளக்குறிச்சியில் மாவட்ட தேமுதிக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், "தேமுதிகவிற்கு கெஞ்சிப் பழக்கமில்லை. தேமுதிக 234 தொகுதிகளிலும் தனித்துக் களம் கண்ட கட்சி. இருப்பினும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கி இருப்பதால் கூட்டணியை நாட வேண்டியுள்ளது" எனப் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x