

மத்திய பாதுகாப்பு படைக்காக சென்னை உயர் நீதிமன்ற வளாகம் இரண்டாக பிரிக்கப்படுகிறது.
சென்னை உயர் நீதிமன்றத் துக்கு மத்திய பாதுகாப்புப் படை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வு கடந்த 30-ம் தேதி உத்தர விட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு செய்த மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்ற பாது காப்பை மத்திய பாதுகாப்புப் படை யிடம் ஒப்படைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் உயர் நீதி மன்றத்தில் நேற்று நடைபெற்றது.
சென்னை உயர் நீதிமன்ற பாது காப்புக் குழு தலைவர் நீதிபதி சுதாகர் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், சொக்கலிங்கம், கே.கே.சசிதரன், சென்னை மாநகர காவல் ஆணை யர் டி.கே.ராஜேந்திரன், கூடுதல் காவல் ஆணையர் (வடக்கு) ரவிக்குமார், காவல் இணை ஆணையர் (வடக்கு) தினகரன், சென்னை உயர் நீதிமன்ற காவல் உதவி ஆணையர் கண்ணன், அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமை யாஜி, அரசு வழக்கறிஞர்கள் எஸ்.டி.எஸ். மூர்த்தி, மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை சீனியர் கமாண்டன்ட் எம்.ஆர். பாலி, சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் கலையரசன், பதிவாளர் (நிர்வாகம்) தேவனாதன், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
உயர் நீதிமன்றத்தையும், கீழமை நீதிமன்றங்களான குடும்ப நல நீதி மன்றம், சிறு வழக்குகள் நீதிமன் றம், அமர்வு நீதிமன்றம் ஆகியவற் றையும் தனியாகப் பிரிப்பது பற்றி யும் அதற்காக வேலி அமைப்பது பற்றியும் இக்கூட்டத்தில் ஆலோ சிக்கப்பட்டது. மேலும் உயர் நீதிமன்றத்துக்கு வருவோரை எந்த நுழைவுவாயிலில் அனுமதிப்பது, எந்த மாதிரியான அடையாள அட்டையை வழங்குவது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
அப்போது உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் கூறும் போது, “உயர் நீதிமன்றத்துக்கு வருவோர் ஒவ்வொருவரையும் நிறுத்தி சோதனை செய்தால் வழக் கறிஞர்கள் குறித்த நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது. எனவே அனைவருக்கும் அடை யாள அட்டை கொடுத்து முடித்த பிறகே முழுமையான பாதுகாப்பை மேற்கொள்ள வேண்டும். உயர் நீதிமன்றத்துக்கு வருவோருக்காக வடக்கு பகுதியில் மெட்ராஸ் பார் அசோசியேஷன் அருகேயுள்ள நுழைவுவாயிலை பிரத்யேகமாகப் பயன்படுத்த வேண்டும்” என்றார்.
பவர் பாயிண்ட் பிரசன்டேஷன் மூலம் உயர் நீதிமன்றத்தில் எந் தெந்த இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது, கார் பார்க் கிங்கை எப்படி முறைப்படுத்துவது என்பது குறித்தும் விவாதிக் கப்பட்டது.
மத்திய பாதுகாப்புப் படை சோதனை மேற்கொள்ளும்போது ஏதாவது நடைமுறைச் சிக்கல் ஏற்பட்டால், அதை சுமூகமாக தீர்க்க அட்வகேட் ஜெனரல், கூடுதல் அட்வகேட் ஜெனரல், அரசு வழக்கறிஞர்கள், வழங்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. கீழமை நீதிமன்றங்களின் பாதுகாப்பை தமிழக போலீசாரிடம் ஒப்படைப்பது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தில், மத்திய தொழி லகப் பாதுகாப்புப் படைக்கான முன்வைப்புத் தொகை ரூ.16.60 கோடிக்கான வரைவோலையை தமிழக அரசு வழங்கிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், உயர் நீதிமன்றத்துக்கு எந்த அடிப்படையில் மத்திய பாது காப்புப் படை பாதுகாப்பு வழங் கப்படும் என்பது குறித்து வரும் 14-ம் தேதி அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தின் எல் லையை வரையறுப்பது தொடர் பாக சென்னை மாநகர காவல் ஆணையர் மற்றும் மத்திய தொழிலகப் பாதுகாப்பு படை டிஐஜி உள்ளிட்டோர் இன்று (சனிக்கிழமை) ஆய்வு மேற் கொள்ளவுள்ளனர்.