

தீபாவளி சிறப்பு ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் போதிய வரவேற்பில்லை. முன்பதிவு தொடங்கிய 2 நாட்களுக்குப் பிறகும் சிறப்பு ரயில்களில் ஏராள மான இடங்கள் காலியாக உள்ளன.
தீபாவளி பண்டிகை வரும் 10-ம் தேதி கொண்டாடப்படும் நிலையில் வெளியூர்களுக்குச் செல்லும் அனைத்து முக்கிய ரயில் களிலும் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டன. இந்நிலையில், பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வே கடந்த சனிக்கிழமை சிறப்பு ரயில்களை அறிவித்தது. இதற்கான முன்பதிவு ஞாயிற்றுக் கிழமை தொடங்கியது.
சிறப்பு ரயில்களுக்கு பயணி கள் மத்தியில் பெரும் வர வேற்பு கிடைக்கும் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால், போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. முன்பதிவு தொடங்கி 2 நாட்கள் ஆன நிலையில், சென்னை எழும்பூர்-கோயம்புத்தூர் (06111) சிறப்பு ரயிலில் நேற்றைய நில வரப்படி படுக்கை வசதியில் 94 இடங்களும், 3-ம் வகுப்பு ஏ.சி. பெட்டியில் 37 இடங்களும் காலி யாக இருந்தன.
நாகர்கோயில்-பாட்னா (06115) ரயிலில் படுக்கை வசதி யில் 302 இடங்களும், 3-ம் வகுப்பு ஏ.சி.பெட்டியில் 16 இடங் களும், நாகர்கோயில்-சென்னை சென்ட்ரல் (06117) ரயிலில் படுக்கை வசதியில் 308 இடங் களும், 3-ம் வகுப்பு ஏ.சி.யில் 85 இடங்களும், திருச்சி-சந்திரகாச்சி (06113) ரயிலில் படுக்கை வசதியில் 765 இடங்களும், 3-ம் வகுப்பு ஏ.சி.யில் 150 இடங்களும் காலியாக உள்ளன.
சிறப்பு ரயில்களின் நேரம் பய ணிகளுக்கு சவுகரியமாக இல் லாததே இதற்குக் காரணம் என கூறப்படுகிறது. இதுகுறித்து, பயணிகள் கூறுகையில், தீபா வளிக்கு அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு ரயில்கள் பயணிகளுக்கு சவுகரியமான நேரத்தில் அமைய வில்லை. உதாரணமாக, நாகர் கோயில்-சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் நாகர்கோயிலில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடைகிறது.
இதேபோல், சென்னை எழும்பூர்-கோயம்புத்தூர் சிறப்பு ரயில் எழும்பூரில் இருந்து காலை 10.15 மணிக்குப் புறப்பட்டு அன்று இரவு 9 மணிக்குச் சென்றடைகிறது.
தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு தீபாவளிக்கு ஓரிரு நாட்கள் மட்டுமே விடுமுறை கிடைக்கிறது. இதனால், இந்த சிறப்பு ரயில்களில் சென்றால் அவர்களுக்கு ஒருநாள் முழு வதும் வீணாகிறது. எனவே பயணி களுக்கு பயன்படும் வகையில் இந்த சிறப்பு ரயில்களின் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும்’’ என்றனர்.