மறுபிறவி எடுத்து வந்துள்ளேன்: அமைச்சர் காமராஜ் உருக்கம்

மறுபிறவி எடுத்து வந்துள்ளேன்: அமைச்சர் காமராஜ் உருக்கம்
Updated on
1 min read

கரோனாவில் இருந்து மீண்டுவந்த அமைச்சர் ஆர்.காமராஜ்,‘மறுபிறவி எடுத்து அவைக்கு வந்துள்ளேன்’ என்று சட்டப்பேரவையில் உருக்கமாக பேசினார்.

தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ், கரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், நேற்று சட்டப்பேரவையின் நிறைவு நாள் கூட்டத்தில் பங்கேற்றார்.

கேள்வி நேரத்தின்போது அவர் பேசியதாவது:

நான் மீண்டும் மறுபிறவி எடுத்து அவைக்கு வந்துள்ளேன். கடந்த 5-ம் தேதி கரோனாவால் பாதிக்கப்பட்டேன். 19-ம் தேதி என் உடல்நிலை மோசமானது. முதல்வர் அன்று டெல்லியில் இருந்தார்.

டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர், விமான நிலையத்தில் இருந்து நேரடியாக மருத்துவமனைக்கு, துணை முதல்வருடன் வந்து சிகிச்சை குறித்து விசாரித்தனர்.

என் உயிரை மீண்டும் இந்த அவையில் நிறுத்தி வைத்துள்ள முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் சகோதரர்களாக உள்ள அமைச்சர்கள் அனைவருக்கும் என நன்றி. அனைவருக்கும் என் சந்ததியே நன்றிக்கடன் பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in