அமமுக பிரமுகர் படம், பெயருடன் அரியலூரில் 3,520 குக்கர்கள் பறிமுதல்

அமமுக பிரமுகர் படம், பெயருடன் அரியலூரில் 3,520 குக்கர்கள் பறிமுதல்
Updated on
1 min read

சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், அரியலூரை அடுத்துள்ள வாரணவாசி சமத்துவபுரம் அருகே தேர்தல் பறக்கும் படை அலுவலர் சரவணன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த 2 லாரிகளை மறித்து சோதனை செய்ததில், அவற்றில் ரூ.12 லட்சம் மதிப்பிலான 3,520 குக்கர்கள் இருப்பது தெரியவந்தது. அவை வைக்கப்பட்டிருந்த அட்டைப் பெட்டிகளில், ஜெயலலிதா, சசிகலா, டிடிவி.தினகரன் படங்களுடன், அமமுகவின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வேலு.கார்த்திகேயன் படம், பெயரும், ஜெயலலிதா பிறந்தநாள் விழா எனவும் இடம் பெற்றிருந்தது.

இதையடுத்து, 2 லாரிகளுடன் குக்கர்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அரியலூர் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in