Published : 28 Feb 2021 03:18 AM
Last Updated : 28 Feb 2021 06:33 AM
ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியிருப்பதாவது:
கோயில் என்பது தமிழ் மக்களுக்கு ஆன்மாவைப் போன்றது. இந்த ஆன்மா அரசாங்கத்தின் கையில் அடிமையாக இருப்பது மிகவும் வருத்தமாக உள்ளது. தமிழ்நாட்டில் இருக்கும் கோயில்கள் சரியான பராமரிப்பின்றி பாழடைந்து போயுள்ளன.
2020-ம் ஆண்டு இந்து அறநிலையத் துறை, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓர் அறிக்கையை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில், 34,000 கோயில்களில் ஆண்டுக்கு ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவாகவே வருவானம் வருகிறது. இதேநிலை நீடித்தால், அடுத்த 100 ஆண்டுகளில் முக்கியமான 10 கோயில்களைத் தவிர்த்து மற்ற அனைத்து கோயில்களையும் இல்லாமல் செய்துவிடுவார்கள். எனவே, தமிழகத்தில் இருக்கும் கோயில்கள் அரசாங்கத்தின் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெற வேண்டும். இவ்வாறு அந்த வீடியோவில் சத்குரு கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!