

சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதானபுகார் மீது சுதந்திரமாகவும் நேர்மையாகவும் விசாரணை நடத்த வேண்டும் என தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் அறிக்கை வெளியிட்டது.
இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கத்துக்கு ராஜேஷ் தாஸ் எழுதியுள்ள கடிதத்தில், “என்னைப் பற்றி கேவலமாகவும் அவதூறாகவும் சங்கத்தின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் குரூப்பில் செய்திகள் பரப்பப்படுகின்றன. இச்செயல் என்னுடையவாழ்க்கையிலும், சுதந்திரத்திலும், தனிப்பட்ட உரிமையிலும் தலையிடுவது போன்று உள்ளது. தவறான செய்திகளை வெளியிட்டு,எனது பெயரை கெடுப்பவர்கள் மீது அவதூறு வழக்கு பதிய உரிமை உள்ளது. எனவே சங்க நிர்வாகிகள் என்னைப்பற்றி தவறாக பரப்பும்செய்திகளை நிறுத்த நடவடிக்கைஎடுக்கவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.