விழுப்புரம் மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு

விழுப்புரம் மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டத்தில். நடப்பாண்டில் மார்கழி மாத தொடக்கத்தில் இருந்தே பனி மூட்டம் அதிகமாக காணப்பட்டது. தற்போது, தை மாதம் முடிவடைந்து, மாசி பிறந்து இரு வாரங்களைக் கடந்தும் பனி மூட்டம் குறையவில்லை. மாலை 5 மணிக்கெல்லாம் தொடங்கும் இந்த பனி மூட்டம் படிப்படியாக கூடி, மறுநாள் காலை 8 மணி வரை நீடிக்கிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக அதிகாலை வேளையில் சாலைகளே தெரியாத அளவிற்கு பனிப்பொழிவு அதிகமாக இருக்கிறது. இதனால் பொழுது விடிந்த பிறகும் சாலைகளில் செல்லும் அனைத்து வாகனங்களும் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடி செல்கின்றன. சென்னை- திருச்சி, விழுப்புரம்- கும்பகோணம், விழுப்புரம் - திருவண்ணாமலை, விழுப்புரம்- புதுச்சேரி ஆகிய தேசிய நெடுஞ்சாலைகளில் காலை வேளையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு மிகவும் பனி மூட்டமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி செல்வதை காண முடிகிறது. அதிலும் கடந்த இரு நாட்களாக விழுப்புரம், விக்கிரவாண்டி, செஞ்சி, மேல்மலையனூர், மயிலம், திண்டிவனம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பனிப் பொழிவு அதிகமாக இருக்கிறது.

இதனால் நடைப்பயிற்சிக்கு செல்வோரின் கூட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in