Published : 28 Feb 2021 03:19 AM
Last Updated : 28 Feb 2021 03:19 AM

வெளிநாட்டுப் பறவைகளின் சொர்க்க பூமியான சரணாலயங்கள்

போது நீரால் நிரம்பி, இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான பறவைகள் வலசை வந்து பல மாதங்கள் தங்கி முகாமிட்டு இனப்பெயர்ச்சி செய்து செல்கின்றன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பறவைகளுக்கு என்று சித்திரங்குடி, கஞ்சிரங்குளம், மேல்செல்வனூர்-கீழ்செல்வனூர், தேர்த்தங்கல், சக்கரக்கோட்டை ஆகிய சரணாலயங்கள் உள்ளன. இவை தவிர மன்னார் வளைகுடா தீவுகளும், பறவைகளின் வாழிடங்களாக அமைந் துள்ளன.

சித்திரங்குடி

48 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட சித்திரங்குடி கண்மாய் சரணாலயத்தில் சாம்பல் கூழைக்கடா பறவைகள் அதிகம் கூடுகளைக் கட்டுகின்றன. இங்கு 1988-ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 934 கூழைக்கடா பறவைகளும், 100 கூடுகளும் கண்டறியப்பட்டன. பின்னர் 1989-ல் சரணாலயமாக சித்திரங்குடி கண்மாய் அறிவிக்கப்பட்டது. மேலும் நத்தை குத்தி நாரை, சின்னக் கொக்கு, பெரியகொக்கு, சாம்பல் நாரை, மடையான் பறவைகளும் வருகின்றன.

கஞ்சிரங்குளம்

சித்திரங்குடி அருகிலேயே கஞ்சிரங்குளம் சரணாலயம் அமைந்துள்ளது. இது 1989-ல் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. இதன் பரப்பும் 48 ஹெக்டேர்தான். இங்கு சங்குவளை நாரைகள் அதிகம் கூடு கட்டுகின்றன. சாம்பல் கூழைக்கடா கூடு கட்டியிருக்கும் மரத்திலேயே இவைகளும் கூடு கட்டுகின்றன. சித்திரங்குடி, கஞ்சிரங்குளம் சரணாலயங்கள் இரண்டுமே முக்கியப் பறவைகள் வாழிடங்களாக (Important Bird Area) அறிவிக்கப்பட்டுள்ளன.

மேல்செல்வனூர் - கீழ்செல்வனூர்

தமிழகத்தின் மிகப்பெரிய பறவைகள் சரணாலயங்களில் ஒன்றான இது, சாயல்குடி பகுதியில் 5.63 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளன. இது 1998-ம் ஆண்டு பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. சாம்பல் கூழைக்கடா, சங்குவளை நாரை, நத்தைக் குத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், கரண்டி வாயன் ஆகிய பறவைகள் இங்கு அதிகளவில் கூடுகளை அமைக்கின்றன.

தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயம்

பரமக்குடி தாலுகாவில் தேர்த்தங்கல் கிராமத்தில் 29 ஹெக்டேர் பரப்பளவில் சரணாலயம் உள்ளது. 2010-ம் ஆண்டு இது சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. நீர்ப் பறவை களான நத்தைக்குத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன் பறவைகள் குளத்தைச் சுற்றியுள்ள கருவேல மரங்களில் கூடுகளைக் கட்டுகின்றன. மேலும், இங்கு சுமார் 65 வகையான பறவைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சக்கரக்கோட்டை பறவைகள் சரணாலயம்

சக்கரக்கோட்டை, இராஜசூரியமடை, அச்சடிப்பிரம்பு ஆகிய கிராமப் பகுதிகளில் பரவிக் காணப்படும் சக்கரக்கோட்டை கண்மாய் 2012-ல் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. இதன் பரப்பளவு 230 ஹெக்டேர். சுமார் 123 பறவை இனங்கள் இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் சுமார் 260 வகையான பறவைகள் உள்ளன. இவற்றில் 160 வகையான பறவைகளை வனத்துறையினர் பதிவுசெய்து அவற்றுக்கான அறிமுகக் களக் கையேடும் வெளியிடப்பட்டுள்ளது. இதனை https://birdsoframanathapuram.wordpress.com/ என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x