

சவுதியில் வீட்டு உரிமையாளரால் கை துண்டிக்கப்பட்ட பெண், இன்று சென்னை திரும்புகிறார். அவருக்கு தேவையான மருத்துவ வசதிகளை தமிழக அரசு இலவசமாக செய்து கொடுக்க வேண்டும் என்று அவரது மகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காட்பாடியை அடுத்துள்ள விண் ணம்பள்ளி மூங்கிலேரி கிராமத் தைச் சேர்ந்தவர் கஸ்தூரி(58). குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த ஜூலை மாதம் சவுதி அரே பியாவுக்கு வீட்டு வேலைக்காக சென்றார். அங்கு அவருக்கு அதிகப் படியான வேலை கொடுத்து, சரியாக உணவு வழங்காமல் கொடுமைப்படுத்தியதாக கூறப்படு கிறது. இதுகுறித்து வீட்டின் உரிமையாளரிடம் கேட்டுள்ளார். இது தொடர்பான பிரச்சினையில் கஸ்தூரியின் வலது கையை துண்டித்த வீட்டின் உரிமையாளர், அவரை 3-வது மாடியில் இருந்து இருந்து கீழே தள்ளியுள்ளார்.
உயிருக்கு ஆபத்தான நிலை யில் இருந்த அவரை அருகில் உள்ள வீட்டில் வசித்த இந்தியர் ஒருவர் மீட்டு தனியார் மருத்துவ மனையில் அனுமதித்தார். இந்த தகவலை அடுத்து கஸ்தூரியை மீட்டுக் கொடுக்கும்படி அவரது உறவினர்கள் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் கடந்த மாதம் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் மனு அளித்தனர். இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் விசா ரணை நடத்தினர். மேலும், அவரை இந்தியாவுக்கு அனுப்பவும் நட வடிக்கை எடுத்தனர்.
இந்நிலையில், சவுதியில் இருந்து அவர் இன்று (சனிக் கிழமை) விமானம் மூலம் சென்னை வருகிறார். அவருக்கு சென்னை யில் சிகிச்சை அளிக்க உறவினர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
முதல்வருக்கு வேண்டுகோள்
இதுகுறித்து, கஸ்தூரியின் மகன் மோகன் கூறும்போது, தாய் கஸ்தூரிக்கு காலில் எலும்பு முறிவுக்கு போடப்பட்ட கட்டு பிரிக்கப்படவில்லை. மாடியில் இருந்து கீழே விழுந்ததால் முதுகுப் பகுதியில் வலி அதிகமாக இருப்பதாக கூறினார். அவருக்கு சென்னையில் சிகிச்சை அளிக்க முடிவு செய்திருக்கிறோம். எங்களுக்கு போதிய வருமானம் இல்லை. எனவே, மருத்துவ செலவுகளை இலவசமாக அளிக்க முதலமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.