

கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துறைவாரியாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம், நிதி மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று முன்தினம் இரவு, ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நிவாரண பணி கள் குறித்து அதிகாரிகள் விளக் கினர். ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 220 ஜெனரேட்டர்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், இதுவரை 635 ஊராட்சிகளில் மின் சாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. 32 ஆயிரம் பேருக்கு தினமும் உணவு பொட்டலங்கள் வழங்கப்படுவ தாகவும் தெரிவிக்கப்பட்டது.
சிதம்பரத்தில் நகராட்சியில் குப் பைகள் முழுமையாக அகற்றப் பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட அனைத்து சாலைகளும் போக்குவரத்து நடைபெறும் வகையில் சீரமைக்கப்பட்டுள்ளதாக நெடுஞ் சாலைத்துறை அதிகாரிகள் தெரி வித்தனர். 5 நகராட்சிகளில் மின் விநியோகம் சீரமைக்கப்பட்டுள்ள தோடு, 635 ஊராட்சிகளுக்கு முழு வதுமாக மின்சாரம் வழங்கப்பட் டுள்ளதாகவும், 10 மாவட்டங் களில் இருந்து பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு சீரமைப்பு பணி நடைபெறுவதாகவும் மின்துறை சார்பில் தெரிவிக் கப்பட்டது.
5 மாவட்டத்திலிருந்து 121 சிறப்பு கால்நடை மருத்துவக் குழுவினர் வரவழைக்கப்பட்டு, கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஒரு லட்சம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் இருப்பதாக பொதுப்பணித் துறையினர் தெரிவித்தனர். பயிர் சேத கணக்கெடுக்கும் பணி நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்துக்கு பிறகு அமைச்சர் பன்னீர்செல்வம் கூறியதாவது: தமிழக முதல்வரின் உத்தரவுப்படி கடலூர் மாவட்டத்தில் போர்க்கால அடிப்படையில் நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் அனைத்து இடங்களிலும் 100 சத வீதம் முடிவடையும் வகையில் தொடர்ந்து செயல்பட வேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுவதோடு, பாதிப்புகள் குறித்த நிரந்தர மதிப்பீடு செய்து தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றும் தெரிவிக்க வேண்டும். அனைத்து துறை அலுவலர்களும் ஒன்றி ணைந்து பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார். மழையி னால் இறந்த ராமலிங்கம், லோக நாயகி, தனசேகரன் ஆகிய 3 குடும்பத்தாருக்கு தலா ரூ.4 லட் சத்துக்கான காசோலையை அவர் வழங்கினார். அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், வைத்திலிங்கம், சம்பத், உதயகுமார், முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.