திருமண மண்டபங்களில் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது: தருமபுரி மாவட்ட தேர்தல் அலுவலர் உத்தரவு

திருமண மண்டபங்களில் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது: தருமபுரி மாவட்ட தேர்தல் அலுவலர் உத்தரவு
Updated on
1 min read

அரசியல் சார்புடைய நிகழ்ச்சி களுக்கு திருமண மண்டபங்களில் அனுமதி அளிக்கக் கூடாது என தருமபுரி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கார்த்திகா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

2021-ம் ஆண்டு தமிழக சட்டப் பேரவை தொகுதிகளுக்கு நடக்க உள்ள பொதுத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித் துள்ளது. அதைத் தொடர்ந்து தேர்தல் தொடர்பான நன்னடத்தை விதிகள் அனைத்தும் உடனடியாக தருமபுரி மாவட்டத்தில் அமலுக்கு வந்துள்ளன.

இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள திருமண மண்டபங்கள் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்காக மட்டுமே வாடகைக்கு வழங்கப்பட வேண்டும். அரசியல் சார்புடைய நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது. எனவே, நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு வழங்கும் முன்பாக மண்டப நிர்வாகங்கள் அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அனுமதி பெற வேண்டும்.

பாலக்கோடு சட்டப் பேரவை தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலரான, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் சாந்தியை 99426 46671 என்ற செல்போன் எண்ணிலும், பென்னாகரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், உதவி ஆணையருமான(ஆயம்) தணிகாசலத்தை 94432 26726 என்ற எண்ணிலும், தருமபுரி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான பிரதாப்பை 94450 00428 என்ற எண்ணிலும், பாப்பிரெட்டிப்பட்டி தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளருமான(நிலம்) நாசீரை 75982 44262 என்ற எண்ணிலும், அரூர்(தனி) தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், அரூர் கோட்டாட்சியருமான முத்தையனை 94454 61802 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in