

புதுச்சேரியில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 1,559 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதில், 233 வாக் குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது என்றுபுதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி சுர்பிர் சிங் தெரிவித் தள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக (நேற்று முதல்) அமலுக்கு வருகின்றன. இது தேர்தல் முடியும் வரை நடைமுறையில் இருக்கும்.
புதுச்சேரி மாநிலத்தில் தற்போதைய நிலவரப்படி, 4,71,863 ஆண் வாக்காளர்களும், 5,30,438 பெண் வாக்காளர்களும், 113 மூன்றாம் பாலினத்தவர்களும் (352 வெளிநாடு வாழ் இந்தியர்கள், 303 பாதுகாப்புப் படையினர் உள்பட) என 10,02,414 வாக்காளர்கள் உள்ளனர். வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் 10 நாட்களுக்கு முன்பு வரை புதிய வாக்காளர்கள் தங்களது பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்யப்பட்ட புதிய வாக்காளர்கள் பட்டியல் தனியாக வெளியிடப்படும். வாக்காளர் கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதாஎன 1950 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
கரோனா பெருந்தொற்று காலத்தில் வாக்குச்சாவடிக்கு 1,000 வாக்காளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளதால், புதுச்சேரியில் புதிதாக 607 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன.
தேர்தல் விதி மீறினால் புகார் தெரிவிக்க...
1950 என்ற எண்ணிலும், சிவிஜில் செயலி மூலமாகவும், வாட்ஸ்அப் வழியாகவும் 24 மணி நேரமும் புகார்களைத் தெரிவிக்கலாம். வாட்ஸ்அப் புகார் எண்கள் புதுச்சேரி-89033 31950, காரைக்கால்-89036 91950, மாஹே-80898 01950, ஏனாம்-73824 91950. இவற்றில் உரிய வீடியோ, புகைப்பட ஆதாரங்களுடன் புகாரளித்தால் 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து வாக்குச்சாவடிகளும் தூய்மைப்படுத்தப்பட்டு, சமூக இடைவெளி உள்ளிட்ட அனைத்து கரோனா வழிமுறைகளும் பின்பற்றப்பட்டு, தேர்தல் நடத்தப்படும். வாக்காளர்களுக்கு வாக்களிக்கும் போது கையுறை, முகக்கவசம் வழங்கப்படும் என்றும் புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி சுர்பிர் சிங் தெரிவித்துள்ளார். அதன்படி, ஏற்கெனவேஇருந்த 952 வாக்குச் சாவடிகள் தற்போது 1,559 ஆக உயர்த் தப்பட்டுள்ளன.
இதில் 154 கிராமங் களும், அங்குள்ள 233 வாக்குச் சாவடிகளும் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. 16 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என்றும் கண்டறியப்பட்டுள்ளன. அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். வாக்களிக்க கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்படும். எல்லைகளில் 36 சோதனை சாவடிகள் அமைத்து, தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க பறக்கும் படைகள் அமைத்து கண்காணிக்கப்படும்.
தேர்தல் பணிகளில் 9,140 அரசு ஊழியர்களும், 3,098 காவல்துறையினரும், 10 கம்பெனிகளைச் சேர்ந்த துணை ராணுவப்படையினரும் ஈடுபடுத் தப்பட உள்ளனர். ஏற்கெனவே 6 கம்பெனி துணை ராணுவப் படையினர் புதுவைக்கு வந்துள்ளனர்.
தேவைப்படின் கூடுதலாக துணை ராணுவப் படையினர் வரவழைக்கப்படுவர். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்க ளுக்கான செலவினம் ரூ. 20லட்சத்திலிருந்து, ரூ. 22 லட் சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய மற்றும் மாநில கண்காணிப்பாளர்கள் தேர்தல் செலவினங்களை வீடியோ மூலம் கண்காணிப்பர் என்று தெரிவித்தார்.