

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்று முதல் விருப்ப மனுவை காங்கிரஸ் பெறுகிறது.
இதுதொடர்பாக புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் புதுச்சேரி தொகுதிகளில் போட்டியிடும் நிர்வாகிகளுக்கான விருப்ப மனு பெறுதல் இன்றுமுதல் புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் தொடங்குகிறது. விண்ணப்பப் படிவங்களை காங்கிரஸ் அலுவலகத்தில் ரூ.100 கொடுத்து பெற்றுக் கொள்ளலாம். முழுமையாக நிறைவு செய்யப்பட்ட படிவங்களை இன்று முதல் வருகிற 5-ம் தேதி வரை காலை 11 முதல் மணி முதல் மதியம் 2 மணி வரை காங்கிரஸ் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளப்படும்.
வேட்பு மனுவுடன் கட்டணமாக ரூ.5 ஆயிரம் வங்கியில் செலுத்தியதற்கான ரசீது இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். பெண்களுக்கும், ஆதிதிராவிடர்களுக்கும் 50 சதவீத கட்டண சலுகை வழங்கப் பட்டுள்ளது. மேலும், வேட்பு மனுக்களை பெற்றுக் கொள்கின்ற குழுவுக்கு தலைவராக ஏ.கே.டி. ஆறுமுகம் நியமிக்கப்பட்டுள்ளார். குழுவில் தனுசு, சுவாமிநாதன், இளையராஜா, அப்துல் ரகுமான் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர் என்று குறிப்பிட்டார்.
வைத்திலிங்கம் எம்பி கூறுகையில், “காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்தோருக்கும் விண்ணப் பப்படிவம் பெற்றவர் களுக்கும் தான் வாய்ப்பு தரப்படும். பாஜகவை போல் வேறு கட்சியில் இருந்த வந்தோருக்கு வாய்ப்பு தரப்படாது என்பது உறுதி” என்று குறிப்பிட்டார்.
காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்தோருக்கும் விண்ணப் பப்படிவம் பெற்றவர்களுக்கும் தான் வாய்ப்பு தரப்படும்.