சிவகங்கையில் தொடங்கியது மகளிர் வாரச்சந்தை: பொதுமக்கள் வரவேற்பு

சிவகங்கையில் நடந்த மகளிர் வாரச் சந்தையைப் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி.
சிவகங்கையில் நடந்த மகளிர் வாரச் சந்தையைப் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி.
Updated on
1 min read

சிவகங்கையில் மகளிர் வாரச் சந்தை தொடங்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுவின ரின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், வாரச்சந்தை அல்லாத நாட்களில் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும் மகளிர் வாரச் சந்தைகளை நடத்த மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி உத்தரவிட்டார்.

அதன்படி, சிவகங்கையில் மகளிர் வாரச்சந்தை நேற்று நடந்தது. இதைப் பார்வையிட்ட ஆட்சியர் கூறியதாவது:

சிவகங்கையில் வௌ்ளிக் கிழமை, காரைக்குடியில் செவ் வாய்க்கிழமை, தேவகோட்டையில் புதன்கிழமை, திருப்பத்தூர், சிங்கம்புணரியில் திங்கட்கிழமை, நாட்டரசன்கோட்டையில் புதன்கிழமை, திருப்புவனத்தில் வியாழக்கிழமை, மானாமதுரை, கண்டனூரில் வெள்ளிக்கிழமை, புதுவயல், பள்ளத்தூரில் சனிக் கிழமை மகளிர் வாரச் சந்தை நடக்கும்.

இதில் மகளிர் குழுவினர் காய் கறி, பழங்கள், அழகு சாதனப் பொருள், பூஜை விளக்குகள், ஜவுளி, செட்டிநாடு சிற்றுண்டிகள், பாரம்பரிய உணவுப் பொருட்கள், ஆபரணங்களை விற்பர் என்றார்.

இந்நிகழ்ச்சியில் மகளிர்த் திட்ட அலுவலா் அருண்மணி, நகராட்சி ஆணையா் ஐயப்பன், மகளிர் உதவித் திட்ட அலுவலா் குபேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் மகளிர் வாரச்சந்தைக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in