Published : 27 Feb 2021 03:17 AM
Last Updated : 27 Feb 2021 03:17 AM

திமுகவின் தேர்தல் அறிக்கைக்கு தமிழக முதல்வர் பழனிசாமி அஞ்சுகிறார்: எம்பி தயாநிதி மாறன் விமர்சனம்

தி.மலை மாவட்டம் புதுப்பாளையம் ஒன்றியம் அம்மாபாளையத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினர் பங்கேற்ற கூட்டத்தில் பேசும் திமுக எம்பி தயாநிதி மாறன்.

திருவண்ணாமலை

திமுகவின் தேர்தல் அறிக்கைக்கு முதல்வர் பழனிசாமி அஞ்சுகிறார் என திமுக எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் விமர்சித்துள்ளார்.

“விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்” என்ற தேர்தல் பிரச்சாரத்தை திமுக எம்பி தயாநிதிமாறன் தி.மலை மாவட்டம் கலசப்பாக்கம் மற்றும் போளூர் சட்டப்பேரவைத் தொகுதிகளில் நேற்று தொடங்கினார். அம்மா பாளையத்தில் மகளிர் சுய உதவிக் குழு, புதுப்பாளையத் தில் மாணவர்கள், காஞ்சி கூட்டுச்சாலையில் தொழிலாளர்கள், கடலாடியில் நெசவாளர்கள், ஆத மங்கலம் புதூரில் விவசாயிகள், கலப்பாக்கத்தில் பொதுமக்கள், போளூரில் அமைப்பு சாரா தொழிலாளர்கள், சந்தவாசலில் செங்கல் சூளை தொழிலாளர்கள், படைவீட்டில் வாழை விவசாயிகள், வட மாதிமங்கலத்தில் கரும்பு விவசாயிகள், களம்பூரில் அரிசி உற்பத்தியாளர்கள் ஆகியோருடன் கலந்துரையாடினார்.

முன்னதாக, புதுப்பாளை யத்தில் செய்தியாளர்களிடம் தயாநிதி மாறன் கூறும்போது, “தமிழகத்தின் அடுத்த முதல் வராக திமுக தலைவர் மு.க.ஸ்டா லின்தான் வர வேண்டும் என ஒருமித்த குரலோடு மக்கள் இருக் கின்றனர். தமிழக உரிமைகளை காக்கக் கூடியவர், தமிழக உரிமைகளுக்காக போராடக் கூடியவர், போராடி வெற்றி பெறக்கூடிய ஒரே தலைவர் ஸ்டாலின்தான். 200 தொகுதிகளில் வெற்றிபெறுவோம் என ஸ்டாலின் கூறி உள்ளார். ஆனால், தமிழகத்தில் உள்ள மக்களின் எழுச்சியை பார்க்கும்போது, 234 தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெறும் என உறுதியான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட கூட்டணி தொடரும் என தெரிவித்துள்ளனர்.

திமுகவின் தேர்தல் அறிக்கை மிக சிறப்பாக இருக்கும் என்பதை உணர்ந்து கொண்டு, இறுதி காலத்தில் சாகும்போது சங்கரா சங்கரா என்பதுபோல், முதல்வர் பழனிசாமி, வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி வருகிறார். திமுகவின் தேர்தல் அறிக்கைக்கு முதல்வர் பழனிசாமி அஞ்சுகிறார். தமிழக மக்களின் வாழ்க்கையை முன்னேற்றும் தேர்தல் அறிக்கையாக திமுகவின் தேர்தல் அறிக்கை இருக்கும்.

தேர்தலுக்காக மாணவர்களின் எதிர்காலத்தில் தமிழக அரசு விளையாடி வருகிறது. பத்தாம் வகுப்பு படித்தால்தான், பிளஸ் 1 வகுப்புக்கு குரூப் தேர்வு செய்ய வேண்டும்.

ஏற்கெனவே, ஓராண்டாக பள்ளிக்கு மாணவ, மாணவிகள் போகவில்லை. பிளஸ் 1 வகுப்புக்கு எந்த குரூப்பை எப்படி தேர்வு செய்ய முடியும். தேர்தலை மனதில் வைத்து அனைவரும் தேர்ச்சி என அறிவித்துள்ளனர். அறிவுப் பூர்வமாக செய்யவில்லை என்ற கருத்து நிலவுகிறது” என்றார்.

அப்போது, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் பலர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x