குற்ற நகரமாகிறதா பொள்ளாச்சி?: பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள் குமுறல்

குற்ற நகரமாகிறதா பொள்ளாச்சி?: பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள் குமுறல்
Updated on
2 min read

சுந்தரிக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வயது 11. வறுமை காரணமாக நான்காம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு பண்ணையில் வீட்டு வேலைக்கு மகளை அனுப்பினார் தந்தை. திடீரென்று ஒருநாள் பண்ணை வீட்டில் ரத்தக்காயங்களுடன் மயங் கிக் கிடந்தாள் சிறுமி. பெற்றோர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுமி இறந்துவிட்டாள்.

சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சித்திரவதைக்கு உள் ளாக்கப்பட்டிருக்கிறார் என்று மருத் துவர்கள் காவல் துறையினரிடம் தெரிவித்தனர். பண்ணை முத லாளியை அழைத்துக் காவல் துறை யினர் விசாரித்தபோது ஆளும் கட்சி பலத்தை வைத்து மிரட்டி னார். அதையடுத்து பொதுமக்கள் திரண்டு போராடிய பிறகு பண்ணை யார் கைது செய்யப்பட்டார்.

பள்ளிச் சிறுமியிடம் சில்மிஷம்

அருந்ததி (பெயர் மாற்றப் பட்டுள்ளது) வயது 15. நக ராட்சிப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித் தார். இச்சிறுமி பள்ளி செல்லும் போது சில்மிஷ வலைகளை வீசி யிருக்கிறார் 24 வயதான கார்த்திக்.

ஒருநாள் பள்ளியில் இருந்து திரும்பும் வழியிலேயே சிறுமியை மடக்கி தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியிருக்கிறார். கசங்கிய உடையுடன் வீட்டுக்கு வந்த மக ளைப் பார்த்து பெற்றோர் பதறி யிருக்கின்றனர்.

விஷயம் அறிந்து கார்த்தியை விசாரிக்க அருந்ததியின் நடத்தை யையே கேவலமாகப் பேசியிருக் கிறான். அவமானம் தாளாமல் சிறுமி தீக்குளித்துள்ளார். மறு நாள் மருத்துவமனையில் இறந்து போனார். அருந்ததியின் மரணத் துக்குக் காரணமான கார்த்தி, அவனது பெற்றோர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

அடுத்தடுத்த குற்ற சம்பவங்கள்

இதில் முதலாவது சம்பவம் நடந் தது பொள்ளாச்சியில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள மீனாட்சி புரம் மணக்கடவு. இரண்டாவது சம்பவம் நடைபெற்றது பொள்ளாச் சிக்கு அருகே இருக்கும் மாக்கினாம் பட்டி.

இந்த இரண்டு சம்பவங்களும் நடைபெற்று ஒரு மாதம்கூட கடக் காத நிலையில்தான் பொள்ளாச்சி டிஇஎல்சி தேவலாய மாணவர் விடுதியில் உள்ள சிறுமிகளை பாலி யல் பலாத்கார சம்பவம் நடந்தேறி யிருக்கிறது.

ஆசியாவிலேயே மிகப்பெரிய சந்தை இருக்கும் இடம் பொள் ளாச்சி. ஊத்துக்குளி, புரவிபாளை யம், சமத்தூர், சிங்காநல்லூர் என அதிகமான ஜமீன்களைக் கொண் டிருக்கும் நகரமும் பொள்ளாச்சி தான். இப்படி தனி அடையாளங் கள் கொண்ட நகரில் அடுத் தடுத்து நடைபெற்ற சம்பவங் களைப் பார்த்து சமூக ஆர்வலர் கள் விக்கித்து போயுள்ளனர்.

பொள்ளாச்சிக்கு என்ன ஆச்சு என்று கேள்வி எழுப்பும் அவர் கள், இந்த நகரத்தின் மீது கூடுதல் கண்காணிப்பை போலீஸார் செலுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறார்கள்.

என்ன சொல்கிறார்கள்

இது குறித்து கோவை மூத்த வழக்கறிஞர்கள் ஞானபாரதி, ஜெய சீலன் ஆகியோர் கூறியதாவது:

பொள்ளாச்சியில் பொது வாகவே க்ரைம் ரேட் அதிகம். பொள் ளாச்சியில் இருந்து கேரளத்துக்குச் செல்ல பத்துக்கும் மேற்பட்ட வழிகள் உள்ளன. மணல், அரிசி, காய்கறிகள், ஸ்பிரிட் என அனைத்தும் தமிழகத்தைவிட பல மடங்கு கூடுதல் விலை கிடைக்கும் என்று இவற்றைக் கடத்துவோர் எண்ணிக்கை அதிகம். அதில் கிடைக் கும் பொருளாதார வளத்தை வைத் தும் தப்பு தண்டா காரியங்களில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது.

கோவை மாவட்டத்துடன் திருப்பூர் இருந்தபோது பனியன் தொழில் தொடர்பாக லட்சக் கணக்கானோர் வர ஆரம்பித்தனர். அவர்களோடு கிரிமினல்களும் வர ஆரம்பித்தனர். இதன் தொடர்ச்சி யாகத்தான் கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்களும் பெருகின.

பாலக்காட்டைச் சேர்ந்த பழனி யப்பன் என்பவர் கூறும்போது, ‘10 ஆண்டுகளுக்கு முன்பு கேரள எல்லையோரம் கொழிஞ் சாம்பாறையில் 30-க்கும் மேற்பட்ட சந்தன எண்ணெய் ஆலைகள் இருந் தன. பொள்ளாச்சி, வால்பாறை, சின்னாறு, மூணாறு ஆகிய நகரங் களைச் சுற்றியுள்ள பாதுகாக்கப் பட்ட வனப் பகுதியில் இருந்து சந்தன எண்ணெய் தயாரிக்கும் ஆலை களுக்குத்தான் சந்தன மரங்கள் வரும். அந்த ஆலைகள் மூடப்பட்டுவிட்டதால் சந்தன மரக் கடத்தலில் ஈடுபட்ட பழைய கிரிமினல்கள் தற்போது ஸ்பிரிட், மணல் கடத்தல் என்று தாவிவிட்டனர். இருப்பினும் இவர் களின் புகலிடமாகப் பொள்ளாச்சி இருக்கிறது‘’ என்றார்.

பொள்ளாச்சி நகர அரசியல் பிரமுகர் ஒருவர் கூறியதாவது:

பலாத்காரம் நடைபெற்ற மாணவ விடுதியைச் சுற்றி 5 மதுக் கடைகள் உள்ளன. சுற்றிலும் கஞ்சா விற்பனை அமோகமாக நடை பெறுகிறது. இதைப்பற்றி பல முறை நாங்கள் புகார் எழுதியி ருக்கிறோம். அதற்கு எந்த நடவடிக் கையும் இல்லை. இச்சம்பவத் துக்குப் பிறகுதான் பாலி யல் பலாத்கார குற்றங்களில் ஈடு பட்டு வந்த பழைய குற்றவாளிகள் 12 பேரை பிடித்து வந்துள்ளது காவல் துறை என்றார் வேதனை யுடன். பொள்ளாச்சி, கிரிமினல்க ளின் சரணாலயமாவது ஆபத் தானது. அதை அரசு வரும் முன் தடுக்க வேண்டும் என்கிறார்கள் இங்குள்ள மக்கள்.

காவல் துறை நடவடிக்கை என்ன?

பொள்ளாச்சியில் கிரிமினல்கள் ஆதிக்கத்தை ஒழிக்கக் காவல் துறை கூடுதலாக என்ன ஏற்பாடு செய்துள்ளது என்று கோவை மாவட்டக் காவல் துறை கண்காணிப் பாளர் சுதாகரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:

பொள்ளாச்சியில் கடந்த ஆண் டைக் காட்டிலும் தற்போது க்ரைம் ரேட் குறைந்துள்ளது. காவல் துறையினர் கூடுதல் கவனம் செலுத்தியதால்தான் இது நடந்துள் ளது. இப்போது மாணவர்கள் இல் லத்தில் நடந்த சம்பவத்துக்குப் பிறகு பொள்ளாச்சியில் மட்டு மல்ல; மாவட்டத்தில் உள்ள அனைத்து மாணவர் விடுதிகளை யும் கடுமையான சோதனைக்குட் படுத்தி, கண்காணிப்பை பலப் படுத்தியிருக்கிறோம். கேரளத்துக் குச் செல்லும் அனைத்து பாதை களிலும் சோதனைச் சாவடிகளை பலப்படுத்தியுள்ளோம் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in