

திண்டிவனம் அருகே தீவனூர் நான்கு முனை கூட்டு சாலை அருகில் ”உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” தேர்தல் பரப்புரைக் கூட்டம் இன்று (பிப்.26) காலை 8 மணிக்கு நடைபெறுகிறது.
விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை:
விழுப்புரம் வடக்கு மாவட்டத் தில் உள்ள செஞ்சி, மயிலம், திண்டிவனம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள நிர்வாகிகள் அனைவரும் பொதுமக்களை திரட்டி ”உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” நிகழ்ச்சியில் மனுக்கள் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். பொதுமக்கள் ஸ்டாலினுடன் நேரடியாக கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம். மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் கிளை நிர்வாகிகள், அனைத்து அணிகளின் நிர்வாகி கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.