புதுவையில் பிரதமருக்கு கருப்புக் கொடி: 77 பேர் கைது
புதுச்சேரி மக்களால் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை சூழ்ச்சிகள் மூலம் கலைத்து துரோகம் இழைத்ததை கண்டித்தும், நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள்ஒதுக்கீட்டை நிறைவேற்றாத பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசைக் கண்டித்தும், பிரதமர் மோடி புதுச்சேரி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பல்வேறு இயக்கங்கள் சார்பில் நேற்று கருப்பு கொடி பேரணி நடைபெற்றது. மாணவர் கூட்டமைப்பு தலைவர் சுவாமிநாதன் தலைமையில் 80-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆம்பூர் சாலை பழைய சட்டக் கல்லூரியி ருந்து, லாஸ்பேட்டை விமான நிலையம் நோக்கிகருப்பு சட்டை, கருப்புக் கொடி ஏந்தி பேரணியாகவந்தபோது புஸ்சி வீதி, ஆம்பூர் சாலை சந்திப்பில் அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.பின்னர் அங்கு மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கிருந்த சிலர் கருப்பு பலூன்களை பறக்கவிட்டனர். இதையடுத்து 2 பெண்கள் உட்பட 77 பேரை போலீஸார் கைது செய்தனர்.
