5 மாவட்டங்களில் ரூ.147 கோடியில் நவீன கூட்டுறவு நூற்பாலைகள்: முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார்

5 மாவட்டங்களில் ரூ.147 கோடியில் நவீன கூட்டுறவு நூற்பாலைகள்: முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார்
Updated on
1 min read

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் ரூ.147 கோடி செலவில் அமைக் கப்பட்டுள்ள நவீன நூற்பாலை களை காணொலி காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் ரூ.31 கோடியே 11 லட்சத்து 93 ஆயிரத்தில் கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலை, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் ரூ.30.38 கோடியில் அண்ணா கூட்டுறவு நூற்பாலை, தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தில் ரூ.26.90 கோடியில் பாரதி கூட்டுறவு நூற்பாலை, புதுக்கோட்டை மாவட் டம் அறந்தாங்கியில் ரூ.30.41 கோடியில் புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு நூற்பாலை, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் ரூ.28.40 கோடியில் கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலை என மொத்தம் ரூ.147 கோடியே 21 லட்சத்து 15 ஆயிரம் செலவில் 5 நவீன நூற்பாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தலைமைச் செயலகத்தில் கடந்த 13-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த 5 நவீன நூற்பாலைகளையும் காணொலி காட்சி மூலம் முதல்வர் ஜெய லலிதா திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் கைத்தறி, துணிநூல் துறை அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா, தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், கைத்தறி, துணிநூல் துறை முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், துணிநூல் இயக்குநர் க.லதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in