

இலங்கையில் சித்ரவதைக் கூடங் கள் இயங்கி வந்ததாக ஐ.நா. குழு கூறியுள்ள நிலையில், அது தொடர்பாக பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக பாமக நிறுவ னர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை: இலங்கைப் போரில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட நிலை யில், மேலும் பல ஆயிரம் பேர் காணாமல் போனதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து விசாரணை நடத் திய ஐ.நா. குழு ‘இலங்கை கிழக்கு மாநிலத்தில் உள்ள திரிகோணமலை மாவட்ட கடற் படை தளத்துக்கு உள்ளே ஒரு சித்ரவதைக் கூடம் ரகசியமாக செயல்பட்டு வந்தது’ என்று தனது அறிக்கையில் கூறியுள்ளது.
இலங்கைப் போர் முடிந்து ஓராண்டு வரை இந்த சித்ரவதைக் கூடம் செயல்பட்டு வந்ததாகவும், அங்கு ஏராளமானவர்கள் சித்ரவதை செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் ஐ.நா. குழு தெரிவித்துள்ளது. குறுகிய காலமே விசாரணை நடத்த அனுமதிக்கப்பட்டதால் முழு உண்மைகளை வெளிக்கொண்டு வர முடியவில்லை என்றும் இது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அக்குழு கூறியுள்ளது. இலங்கையில் செயல்பட்டு வந்த, செயல்பட்டு வரும் சித்ரவதைக் கூடங்கள் குறித்து பன்னாட்டு குழுவை அனுப்பி முழு விசாரணை நடத்தவும், சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்க வும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வைகோ:
இதே போல் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில், “இலங் கையில் ‘கிழக்கு மாகாணத்தில் திரிகோண மலை கடற்படைத் தளத்தில் சித்திரவதைக் கூடங் கள் இருந்தன’ என்று ஐ.நா. விசாரணைக் குழு நேற்று வெளியிட்ட தகவல் அதிர்ச்சி அளிக் கிறது. இதற்கு நீதி கிடைக்க உலகெங்கும் வாழும் தமிழர்கள், அந்தந்த நாடுகளிலும் அறப் போராட்டங்களை நடத்தி அழுத் தம் தர வேண்டிய கட்டா யம் ஏற் பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.