Published : 25 Feb 2021 08:40 PM
Last Updated : 25 Feb 2021 08:40 PM

மார்ச் 7-ல் ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம்: சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ஏற்பாடு

சென்னை

வரும் மார்ச் 7-ம் தேதி, ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக் குழு கூட்டம் நடைபெறவிருப்பதாக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

தமிழகம், சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்நோக்கியுள்ள நிலையில் தேர்தல் தொடர்பான ஆலோசனைகளை மேற்கொள்ளும் பொருட்டு திமுக பொதுக்குழு மார்ச் 7-ல் கூடவிருப்பதாகக் கட்சி வட்டாரம் தெரிவிக்கின்றது.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மு.க.ஸ்டாலின் தலைமையில் 7-3-2021 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில்
திமுக பொதுக்குழுக் கூட்டம், சென்னை, கொட்டிவாக்கம், பழைய மாமல்லபுரம் சாலை, ஒய்.எம்.சி.ஏ. திடலில் உள்ள அரங்கத்தில் நடைபெறும்.

பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் திமுக இன்று தொடங்கிய நிலையில் பொதுக்குழுவையும் கூட்டியிருப்பது திமுக கட்சியினர் மத்தியில் உற்சாகத்தைக் கூட்டியிருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x