Published : 27 Nov 2015 09:10 AM
Last Updated : 27 Nov 2015 09:10 AM

பாஜக துணைத் தலைவராக நெப்போலியன் நியமனம்: கங்கை அமரன், கஸ்தூரிராஜாவுக்கும் பதவி

பாஜக மாநில துணைத் தலை வராக முன்னாள் மத்திய இணை அமைச்சர் நெப்போலியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று வெளி யிட்ட அறிக்கை:

பாஜக மாநில துணைத் தலை வராக முன்னாள் மத்திய இணை அமைச்சர் நெப்போலியன், மாநிலச் செயலாளராக புரட்சி கவிதாசன், மாநில செயற்குழு உறுப்பினர், விவசாய அணியின் மாநில துணைத் தலைவராக முன்னாள் எம்.எல்.ஏ. வேதரத் தினம், மாநில செயற்குழு உறுப் பினராக முன்னாள் எம்.எல்.ஏ. மணி, கலைப் பிரிவு புரவலராக இசையமைப்பாளர் கங்கை அமரன், மாநில தேர்தல் பிரிவு தலைவராக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி மலைச்சாமி, முன் னாள் ராணுவத்தினர் பிரிவு மாநிலத் தலைவராக கர்னல் பாண்டியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாநில செயற்குழு உறுப் பினர், கலைப் பிரிவு துணைத் தலைவர்களாக திரைப்பட இயக்குநர் கஸ்தூரிராஜா, கீதா ராஜசேகர், மாநில செயற்குழு உறுப்பினர், மருத்துவப் பிரிவு மாநில துணைத் தலைவராக டாக்டர் சரவணன், பிரச்சார பிரிவு மாநில துணைத் தலைவராக நடிகை குட்டி பத்மினி, கலைப் பிரிவு மாநிலச் செயலாளராக நடிகை காயத்ரி ரகுராம் ஆகி யோர் நியமிக்கப்பட்டுள்ள னர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

11 மாதங்களுக்குப் பிறகு பதவி

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் நெருங்கிய உறவினரான நடிகர் நெப்போலி யன் திமுக தலைமைக்கு நெருக்கமானவராக இருந்தார். 2001-ல் திமுக சார்பில் வில்லி வாக்கம் தொகுதியிலிருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப் பட்டார். 2009 மக்களவைத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதி யில் வென்று மத்திய சமூக நீதித் துறை இணை அமைச்சரானார்.

கே.என்.நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, மு.க.அழகிரியின் ஆதரவாளராக மாறிய நெப்போலியனுக்கு கடந்த மக்களவைத் தேர்த லில் போட்டியிட வாய்ப்பு கிடைக்க வில்லை. இதனால், அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த அவர் கடந்த 2014 டிசம்பர் 21-ம் தேதி பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். ஆனாலும் கட்சிப் பணியில் ஆர்வம் காட்டாமல் இருந்த அவருக்கு 11 மாதங்களுக்குப் பிறகு மாநில துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

அதுபோல நடிகர் ரஜினி காந்தின் சம்பந்தியும், நடிகர் தனுஷின் தந்தையுமான கஸ்தூரி ராஜா, இசையமைப்பாளர் இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன், நடிகைகள் குட்டி பத்மினி, காயத்ரி ரகுராம், அதிமுகவில் இருந்து பாஜகவில் இணைந்த முன்னாள் எம்.பி. மலைச்சாமி, திமுகவில் இருந்து பாஜகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ. வேதரத்தினம், மக்கள் தமிழகம் கட்சியை கலைத்துவிட்டு பாஜகவில் இணைந்த புரட்சி கவிதாசன் ஆகியோருக்கு கட்சியில் இணைந்த ஓராண்டுக்குப் பிறகு பதவி வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பாஜகவில் இணைந்த மதுரை புறநகர் மாவட்ட மதிமுக செயலாளர் டாக்டர் சரவணனுக்கும் பதவி வழங்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x