எடப்பாடியில் இபிஎஸ்; போடியில் ஓபிஎஸ்: அதிமுகவில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது

எடப்பாடியில் இபிஎஸ்; போடியில் ஓபிஎஸ்: அதிமுகவில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது
Updated on
1 min read

சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகசார்பில் போட்டியிட விரும்புவோ ருக்கான விருப்ப மனு விநி யோகம் நேற்று தொடங்கியது. முதல்வர் பழனிசாமி எடப்பாடி தொகுதியிலும், துணை முதல்வர்ஓ.பன்னீர்செல்வம் போடி தொகுதியிலும் போட்டியிடுவதற்காக விருப்ப மனு அளித்துள்ளனர்.

பேரவைத் தேர்தல் நெருங்கு வதையொட்டி அதிமுக சார்பில் விருப்ப மனுக்கள் நேற்று முதல் விநியோகிக்கப்பட்டன. முன்னதாக, தமிழகத்தில் போட்டியிட ரூ.15 ஆயிரம், புதுச்சேரிக்கு ரூ.5 ஆயிரம், கேரளாவுக்கு ரூ.2 ஆயிரம் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. வரும் மார்ச் 5-ம் தேதி வரை விருப்ப மனுக்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப் பாளர் முதல்வர் பழனிசாமி ஆகியோர் விருப்ப மனு தாக்கலை தொடங்கி வைத்தனர்.

முதலில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முதல்வர் பழனிசாமிக்கு அதிமுக தலைமை அலுவலக செயலாளர் மகாலிங்கம், விருப்ப மனுக்களை வழங்கினார்.

நேற்றே ஆயிரத்துக்கும் மேற்பட்ட விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பலரும் தாங்கள் போட்டியிட மனு அளித்துள்ளதுடன், ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தங்கள் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித் தும், எடப்பாடி மற்றும் போடி தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்தும் மனுக்களை அளித்துள்ளனர்.

இரண்டாவது நாளாக இன்றும் விருப்ப மனு வழங்கும் பணி தொடர்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in