

இந்திய பத்திரிகைகள், மின்னணு ஊடகங்கள் மதச்சார்பின்மையை கட்டிக் காக்கின்றன என்று ‘இந்து’ என்.ராம் பெருமிதம் தெரி வித்துள்ளார்.
‘தி இந்து’ ஆங்கில நாளித ழின் மும்பை பதிப்பு இன்று தொடங்கப்படுகிறது. இதையொட்டி என்.ராம் மும்பையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மதச்சார்பின்மை கொள்கை, கோட்பாடுகள் நமது அரசமைப்புச் சட்டத்தில் மிக ஆழமாக வேரூன்றி யுள்ளன. அனைத்து மதங்கள், நம்பிக்கைகளில் சமநிலையை கடைப்பிடிப்பதே மதச்சார்பின்மை யின் உண்மையான அர்த்தம்.
மதச்சார்பற்ற அரசு அனைத்து மதத்தினரையும் பாதுகாக்கிறது. அவர்களின் கவுரவத்துக்கு உத்தர வாதம் அளிக்கிறது. மதச்சார்பின் மைக்கு ஆபத்து ஏற்படும்போது பெரும்பான்மை, சிறுபான்மை என்ற பாரபட்சமின்றி கடுமையான நட வடிக்கைகளை எடுக்கிறது. இது தான் மதச்சார்பின்மை. ஆரம்ப காலம் முதலே ‘தி இந்து’ மதச்சார் பின்மைக்கு பக்கபலமாக நிற்கிறது. ‘தி இந்து’வில் வெளியான முதல் தலையங்கத்தில் ‘நாங்கள் எவ்வித மத விவகாரங்களிலும் தலையிட மாட்டோம்’ என்று தெளிவுபடுத்தி னோம்.
இந்திய பத்திரிகைகள், மின் னணு ஊடகங்கள் மதச்சார்பின் மைக்கு ஆதரவாக உள்ளன. அதனால்தான் சகிப்பின்மை விவகாரங்கள் எழும்போதெல்லாம் ஊடகங்கள் அவற்றை கடுமையாக எதிர்க்கின்றன. சகிப்பின்மைக்கு எதிராக எழுத்தாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், விஞ்ஞானிகள் ஆகியோரும் குரல் கொடுத்தி ருப்பது பாராட்டுக்குரியது.
மும்பையில் நடைபெற்ற பல் வேறு விவாதங்களில் பங்கேற் றிருக்கிறேன். நாட்டில் சகிப்பின்மை பிரச்சினை எழும்போது அதற்கு எதிராக நாங்கள் குரல் கொடுக்கி றோம். அதற்கு மும்பை மக்கள் எப்போதும் முழு ஆதரவு அளிக்கிறார்கள்.
மும்பை பதிப்பு தொடக்கம்
‘தி இந்து’ ஆங்கில நாளித ழின் மும்பை பதிப்பு சனிக்கிழமை (இன்று) தொடங்கப்படுகிறது. மும் பையில் ‘தி இந்து’வுக்கு நல்ல மதிப்பு உள்ளது. எனவே நம்பிக்கையோடு கால் பதிக்கிறோம். நம்பிக்கை, நேர்மை, பத்திரிகை தர்மம் ஆகிய வற்றில் ‘தி இந்து’ முழு நம்பிக்கை கொண்டுள்ளது. அதற்கு மக்களின் ஆதரவு நிச்சயம் உண்டு.
மும்பையின் கலாச்சாரம் வியப்பாக இருக்கிறது. நகர மக்கள் அனைவரும் தங்கள் சொந்த காலில் நிற்கிறார்கள். இசை, விளை யாட்டு மீது தீராத தாகம் கொண் டுள்ளனர். எந்த பத்திரிகையையும் போட்டியாளராக நாங்கள் கருத வில்லை. எல்லா பத்திரிகைகளை யும் மதிக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
‘இந்து’ என்.ரவி, ஆசிரியர் டாக்டர் மாலினி பார்த்தசாரதி ஆகியோர் உடன் இருந்தனர்.