

விக்கிரவாண்டி அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி யதில் 30 பேர் காயம் அடைந்தனர்.
கும்பகோணத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு அரசு பேருந்து 40 பயணிகளுடன் சென் னைக்கு சென்றது. விக்கிரவாண்டி அடுத்த பனையபுரம்-பாப்பனப் பட்டு சாலையில் நேற்று அதிகாலை அரசு பேருந்தும், சென்னையில் இருந்து தஞ்சாவூர் நோக்கி சென்ற அரசு விரைவு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் அரசு பேருந்து ஓட்டுநர்கள் ராஜநாயகம்,ராமு மற்றும் பயணிகள் உள்ளிட்ட 30 பேர் காயம் அடைந்தனர். விக்கிரவாண்டி போலீஸார் அனைவரையும் மீட்டுமுண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
டோல்கேட் ஊழியர்கள் கிரேன் உதவியுடன் பேருந்துகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். விபத்து குறித்து விக்கிரவாண்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.