

போடியில் நேற்று வ.உ.சி. சிலைத் திறப்பு விழாவில் பங்கேற்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தைக் கண்டித்து ஒரு பிரிவினர் கோஷமிட்டனர். அவர்களை போலீஸார் வெளியேற்ற முயன் றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
போடி பழைய பஸ் நிலையம் அருகே சிமெண்ட்டால் ஆன வ.உ.சி. சிலை இருந்தது. 2 ஆண்டுகளுக்கு முன்பே அந்தச் சிலை வெண்கலச் சிலையாக மாற்றப்பட்டது. இருப்பினும் சிலையைத் திறக்க அனுமதி கிடைக்கவில்லை.
இந்நிலையில், ஐக்கியப் பிள்ளைமார் சங்கம் சார்பில் கப்பல் வடிவ பீடத்துடன் முழு உருவ வெண்கலச் சிலை நேற்று மாலை திறக்கப்பட்டது.துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோர் சிறப்பு விருந்தி னராகக் கலந்துகொண்டனர். அவர்களுக்கு பஸ் நிலையத்தில் இருந்து தாரை, தப்பட்டையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சி தொடங்கியதும், கூட்டத்தில் சிலர், குறிப்பிட்ட சாதிப் பெயரை பிற சமுதாயத் தினருக்கு மாற்றக் கூடாது எனக் கோஷமிட்டனர். தொடர்ந்து முதல்வர், துணை முதல்வரைக் கண்டித்து கோஷமிட்டனர்.
இதனைத் தொடர்ந்து போலீ ஸார் அவர்களை வலுக்கட் டாயமாக அப்புறப்படுத்தினர். அப்போது சிலரை போலீஸார் கைகளால் தாக்கியதால் பர பரப்பு ஏற்பட்டது. அதன்பிறகு கூட்டம் நடந்தது.
துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வ.உ.சி. பற்றி ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு உட னடியாகக் கிளம்பிச் சென்றார்.
இதற்கிடையே சிலை திறப்பு விழாவின்போது, தகராறில் ஈடுபட்டதாக 25 பேரை போடி நகர் போலீஸார் கைதுசெய்தனர்.