திருச்செந்தூரில் சஷ்டி விழா தொடக்கம்

திருச்செந்தூரில் சஷ்டி விழா தொடக்கம்

Published on

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிர மணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா நேற்று யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 17-ம் தேதி நடை பெறுகிறது.

கோயில் நடை நேற்று அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. அதி காலை 5.15 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன், சுவாமி ஜெயந்தி நாதர் யாகசாலைக்கு எழுந்தருளினார். யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது.

காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், பகல் 12 மணியளவில் மகா தீபாராதனை நடைபெற்றது. அதன்பின் சுவாமி தங்க சப்பரத்தில் எழுந்தருளி பிரகாரம் வழியாக பக்தர்கள் வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு பாட, சண்முகவிலாச மண்டபத்தை வந்தடைந்து அங்கு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

மாலையில் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேகம், அலங் காரம் நடந்து, சுவாமி தங்க ரதத்தில் கிரி வீதி வலம் வந்தார்.

சஷ்டி விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலையிலேயே ஆயி ரக்கணக்கான பக்தர்கள் கடலிலும், நாழிக்கிணற் றிலும் நீராடி சஷ்டி விரதத்தை தொடங்கினர். மேலும், கோயில் பிரகாரத்தில் அங்கப்பிரதட்சணம் செய்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in