

குடியாத்தம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட வாக்குச் சாவடி மையங்களை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், எஸ்பி செல்வகுமார் ஆகியோர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர்.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெற வுள்ளது. இதற்கான ஏற்பாடு களை இந்திய தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. விரைவில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, வாக்குச்சாவடி மையங்களில் முன்னேற்பாடு பணிகளை தேர்தல் அலுவலர்கள் விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகின்றனர்.
அதனடிப்படையில், வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டப் பேரவை தொகுதியில் வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் ஆகியோர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர்.
குடியாத்தம் (தனி) தொகுதிக்கு உட்பட்ட கள்ளூர் அரசுப்பள்ளி, பேரணாம்பட்டு அடுத்த சாத்கர் அரசு ஆரம்ப பள்ளி, ஆம்பூர் வட்டம், துத்திப்பட்டு அரசு உயர் நிலைப்பள்ளி, எம்ஜிஆர் நகர் அரசுப்பள்ளியில் அமைக்கப்பட் டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் சாய்வு தளம் அமைத்தல், குடிநீர் மற்றும் மின்சார வசதி, கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகள் செய்யவும், வாக்குப்பதிவின் போது, வாக்காளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், வாக்குச்சாவடி மையத்தின் கட்டிட உறுதித்தன்மை குறித்தும் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம், எஸ்பி செல்வகுமார் ஆகியோர் ஆய்வு செய்து, வருவாய், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் காவல் துறையினருடன் ஆலோசனை நடத்தினர்.
இந்நிகழ்ச்சியில், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் ஷேக் மன்சூர், வட்டாட்சியர் வத்சலா, வட்டார வளர்ச்சி அலுவலர் சுதாகர் உட்பட பலர் உடனிருந்தனர்.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெற வுள்ளது. இதற்கான ஏற்பாடு களை இந்திய தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.