Published : 24 Feb 2021 03:17 AM
Last Updated : 24 Feb 2021 03:17 AM

‘ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை’ திட்டம் தமிழகம் முழுவதும் நடைமுறைக்கு வந்தது

சென்னை

‘ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை’ திட்டம் மாநிலம் முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சட்டப்பேரவை யில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் கூறப்பட்டு இருப்பதாவது:

அனைவருக்கும் பொது விநியோக திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முழுமையாக உறுதி பூண்டுள்ளது. ‘ஒரே நாடு,ஒரே குடும்ப அட்டை’ திட்டம்தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் இருந்து பிற மாநிலங்களுக்கு புலம்பெயரும் தொழிலாளர்களும், பிற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு புலம்பெயரும் தொழிலாளர்களும் அந்தந்த மாநிலங்களில் உள்ள நியாயவிலைக் கடைகளில் அவர்களுக்கான மாதாந்திர ஒதுக்கீட்டு பொருட்களை பெறலாம்.

சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கடந்த 2020-ம்ஆண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரை சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டன. ஏப்ரல் மாதத்தில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 ரொக்க உதவி வழங்கப்பட்டது. மேலும், பொங்கலை முன்னிட்டு ஒவ்வொரு குடும்பத்துக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ. 2,500 ரொக்கம் வழங்கப்பட்டது.

விலையில்லா கறவை மாடுகள்,வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகள் வழங்கும் திட்டம், கோழிகள் வழங்கும் திட்டம் உள்ளிட்ட முன்னோடி திட்டங்களால் கிராமப்புற பொருளாதாரம் வளர்ந்து ஏழை குடும்பங்களின் வருமானம் கணிசமாக உயர்ந்துள்ளது.

கடந்த 2020-2021-ம் ஆண்டில்தேனி, தலைவாசல், உடுமலைப்பேட்டை ஆகிய இடங்களில் புதிதாக கால்நடை மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட்டன. 108 ஆம்புலன்ஸ் போன்று ஊரகங்களில் கால்நடை பராமரிப்புக்காக கால்நடைகளுக்கான நடமாடும் அம்மா ஆம்புலன்ஸ் சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சேலம் தலைவாசலில் ரூ.1,020 கோடி செலவில் 1,102 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த கால்நடை மற்றும் விலங்குகள் உயர்ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு, விவ சாயிகள், தொழில்முனைவோர்கள் பயன்பெறும் வகையில் அதிநவீனகால்நடை உற்பத்தி, பதப்படுத்துதல் மற்றும் சந்தைப்படுத்தலுக்காக வாய்ப்புகள் ஆகியவை காட்சிப்படுத்தப்படும். இதற்கான நிதி ஒதுக்கீடு ரூ.634 கோடியாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x