

திருச்சி மாவட்டத்தில் உள்ள 147 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் 66,881 விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் ரூ.525.59 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கரோனா தொற்று காரணமாக விவசா யத் தொழில் பாதிப்புக்கு உள்ளானதால் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்து தமிழக முதல்வர் அறிவித்தார்.
இதில், திருச்சி மாவட்டத்தில் உள்ள 147 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர்க்கடன் பெற்று 31.01.2021-ல் நிலுவையில் உள்ள 66,881 விவசாயிகளின் பயிர்க்கடன் நிலுவைத் தொகையான அசல் ரூ.481.59 கோடி மற்றும் வட்டி ரூ.44 கோடி என மொத்தம் ரூ.525.59 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.