நிவாரண முகாம்களில் இருந்து 26 ஆயிரம் பேர் வீடு திரும்பினர்: அமைச்சர் வளர்மதி தகவல்

நிவாரண முகாம்களில் இருந்து 26 ஆயிரம் பேர் வீடு திரும்பினர்: அமைச்சர் வளர்மதி தகவல்
Updated on
1 min read

சென்னையில் இயல்புநிலை திரும்பி யதால் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்களில் 26 ஆயிரம் பேர் தங்கள் வீடுகளுக்கு திரும்பினர் என்று சமூக நலத் துறை அமைச்சர் பா.வளர்மதி தெரிவித் துள்ளார்.

சென்னையில் நேற்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது: கனமழை காரணமாக சென்னையில் 859 இடங் களில் மழைநீர் தேங்கியிருந்தது. இதில் 591 இடங்களில் மழை நீர் முழுமையாக அகற்றப்பட்டது. நவம்பர் 18-ம் தேதி வரை மழையால் பாதிக்கப்பட்ட 37 ஆயிரம் பேர் 96 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். மாநகராட்சி மேற்கொண்டுவரும் நிவாரணப் பணிகளால் சென்னையில் இயல்புநிலை திரும்பியுள்ளது. இன்று (வியாழக்கிழமை) 26,608 பேர் தங்கள் வீடுகளுக்கு திரும்பினர். தற்போது நிவாரண முகாம்களின் எண்ணிக்கை 53 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அவற்றில் 10,392 பேர் மட்டுமே உள்ளனர்.

இவ்வாறு அமைச்சர் வளர்மதி கூறினார்.

அமைச்சர் எஸ்.கோகுலஇந்திரா கூறும்போது, ‘‘வில்லிவாக்கம் சிட்கோ நகருக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு 35 ஆயிரம் குடிநீர் பாட்டில்கள், 25 லோடு குடிநீர் வழங்கப்பட்டுள்ளது’’ என்றார்.

மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, ஆணையர் விக்ரம் கபூர், சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் எஸ்.சந்திரமோகன், சென்னை மாவட்ட ஆட்சியர் எஸ்.சுந்தரவல்லி ஆகியோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in