

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தித்திப்பான அறிவிப்புகள் வெளி யாகும் என வைத்திலிங்கம் எம்.பி தெரிவித்தார்.
அரியலூர் பேருந்து நிலை யம் அருகே மாவட்ட அதிமுக சார்பில், எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள் திறப்பு விழா, மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, கரோனா காலகட்டத்தில் 1,15,000 ரேஷன் கார்டுதாரர்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கியதன் நிறைவு விழா என முப்பெரும் விழா நேற்று முன்தினம் நடை பெற்றது.
நிகழ்ச்சிக்கு அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந் திரன் தலைமை வகித்தார். ஜெய கொண்டம் எம்எல்ஏ ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம், முன்னாள் எம்.பி ஆ.இளவரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தி லிங்கம் எம்.பி கலந்து கொண்டு, எம்ஜிஆர், ஜெயலலிதா சிலை களை திறந்து வைத்தும், பயனா ளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் பேசினார்.
அப்போது அவர் பேசியது: நடப்பு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் தித்திப்பான அறிவிப்புகள் வெளியாகும். வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்க அனைவரும் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் பொ.சந்திரசேகர், மாவட்ட மாண வரணிச் செயலாளர் சங்கர், நகரச் செயலாளர் செந்தில் உட்டபட பலர் கலந்து கொண்டனர்.