

ஆம்பூர் எம்எல்ஏ வில்வநாதனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் வில்வநாதன் (55). இவர், கடந்த சில நாட்களாக காய்ச் சல் காரணமாக அவதிப்பட்டு வந்தார். காய்ச்சலுடன் சளியும் இருந்ததால் ஆம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார். அங்கு அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், எம்எல்ஏ வில்வநாதனுக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, அவர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உள்ள தனி வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
எம்எல்ஏ-வுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர்.