தமிழக இடைக்கால பட்ஜெட்; 10 துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு விவரம்

பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார் ஓ.பன்னீர்செல்வம்.
பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார் ஓ.பன்னீர்செல்வம்.
Updated on
1 min read

தமிழக துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இன்று இடைக்கால பட்ஜெட்டில் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்தார்.

இன்று (பிப். 23) காலை 11 மணிக்கு 2021-2022ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதில், பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி விவரம் மற்றும் சிறப்பம்சங்கள்:

*காவல் துறை - ரூ.9,567 கோடி

*தீயணைப்பு மீட்புத்துறை - ரூ.436.68 கோடி

*நீதி, நிர்வாகம் - ரூ.1,437 கோடி

*மீன்வளத்துறை - ரூ.580 கோடி

*மின்துறை - ரூ.7,217 கோடி

*உயர் கல்வித்துறை - ரூ.5,478 கோடி

*வேளாண் துறை - ரூ.11, 982 கோடி

*ஊரக வளர்ச்சித்துறை - ரூ.22, 218.58 கோடி

*பயிர்க் கடன் தள்ளுபடி திட்டம் - ரூ.5,000 கோடி

*கோவை மெட்ரோ ரயில் திட்டம் - ரூ.6,683 கோடி

*அம்மா விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டத்திற்கான நிதியை தமிழக அரசே ஏற்கும்.

*தமிழகத்தில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள 55.67 லட்சம் தகுதியான குடும்பங்களுக்கு குடும்பத் தலைவரின் இயற்கை மரணங்களுக்கு காப்பீடு தொகை ரூ.2 லட்சம் வழங்கப்படும். குடும்பத் தலைவரின் விபத்து மரணத்திற்கு ரூ.4 லட்சம் காப்பீடு தொகை வழங்கப்படும். நிரந்தர இயலாமைக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in