Published : 23 Feb 2021 03:15 AM
Last Updated : 23 Feb 2021 03:15 AM

சட்டப்பேரவையில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை இன்று (பிப்.23) காலை 11 மணிக்கு துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.

கடந்த 2016-ம் ஆண்டு தமிழகத்தில் அமைக்கப்பட்ட 15-வது சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே 24-ம் தேதியுடன் நிறை வடைகிறது. இதையடுத்து பொதுத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் நிலையில், தற்போதைய அரசு 2021-22 நிதியாண்டின் இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே தாக்கல் செய்ய முடியும். அதன்படி, இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் பேரவை யில் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்கிறார்.

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தாக் கல் செய்யப்படும் இடைக்கால பட்ஜெட் என்பதால், முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டுறவு வங்கிகளில் 16 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகள் பெற்றிருந்த ரூ.12,110 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதால், இந்த தொகையை கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்குவதற்கான நிதி பட்ஜெட்டில் ஒதுக்கப்படும்.

அதுபோல விவசாயிகளுக்கு 24 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்குவது, தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தை வலுப்படுத்த ரூ.1,000 கோடி ஒதுக்கீடு உள்ளிட்ட முதல்வரின் பல்வேறு அறிவிப்பு களுக்கும் நிதி ஒதுக்கப்படும். இவைதவிர, ஏற்கெனவே செயல்படுத்தப்படும் திட்டங் களுக்கான நிதியும் ஒதுக்கப்பட்டு, அதற்கு ஒப்புதல் பெறப்படும்.

அத்துடன் பொதுமக்களைக் கவரும் வகையில் குறிப்பாக பெண்கள், மாணவர்கள், இளைஞர்களுக்கான பல்வேறு புதிய திட்டங் கள் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு, பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூடி, எத்தனை நாட் கள் கூட்டத்தை நடத்துவது என்று முடிவு செய்யும். பிப்.24-ம் தேதி ஜெயலலிதா பிறந்த நாள் என்பதால் அந்த நாளை தவிர்த்து, பிப்.25-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை 3 நாட்கள் கூட்டம் நடைபெறும் என்று தெரிகிறது.

இந்த ஆண்டின் பேரவை முதல் கூட்டத் தொடர் கடந்த 2-ம் தேதி நடைபெற்றது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரை யாற்றினார். இந்த கூட்டத்தை திமுக கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்தன. அதனால் பட்ஜெட் கூட்டத் தொடரில் திமுக உள்ளிட்ட அதன் கூட்டணிக் கட்சிகள் பங்கேற்குமா, இல்லையா என்று இன்று தெரியவரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x