

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மூத்த சகோதரி ராஜலெட்சுமி அம்மாள்(85) காலமானார்.
இவர் பாளையங்கோட்டை தென்றல் நகரில் உள்ள தனது இல்லத்தில் வசித்தார். உடல்நல குறைவால் நேற்று காலமானார். தகவல் அறிந்து உறவினர்கள், மதிமுக நிர்வாகிகள் மற்றும் அனைத்து கட்சியினர் அவரது உடலுக்கு அஞ்சலிசெலுத்தினர். விருதுநகர் மாவட்டம், நரிக்குளம் கிராமத்தில் இன்று காலை அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.